வேடசந்தூர் அருகே தனியார் பேருந்து நடத்துனரை அரசு கல்லூரி மாணவர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. 


கரூரிலிருந்து, திண்டுக்கல்லுக்கு குஜிலியம்பாறை வழியாக தினத்தோறும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கபட்டு வருகிறது. இதில் அந்த பகுதி உள்ள கிராமங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள், மாணவிகள் தினந்தோறும் திண்டுக்கல், கரூர் பகுதியில் உள்ள கல்லூரிக்கு சென்று  வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற தனியார் பஸ்சை மருதமுத்து ஒட்டி வந்தார்.


Asia Games 2023: ஆசிய போட்டி மகளிர் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா...தங்கம் வெல்லுமா?




அதே பஸ்ஸில் கண்டக்டராக சிவக்குமார் இருந்துள்ளார். இந்த நிலையில் கரூரை அடுத்துள்ள தான்தோன்றி மலையில் உள்ள அரசு கல்லூரி படிக்கும் மாணவர் ஒருவர் பஸ்சில் ஏறி உள்ளார். இவர் கோம்பை பிரிவில் நிறுத்தத்தில்  பஸ்சை நிறுத்த சொல்லி கேட்டுள்ளார். அதற்கு கண்டக்டர் சிவகுமார் இது நான் ஸ்டாப் பஸ் எங்களுக்கு டைமிங் இல்லை நாங்கள் அந்த நிறுத்தத்தில் நிறுத்த  முடியாது. பின்னாடி வரும் டவுன் பஸ்ஸில் ஏறி வாருங்கள் என கூறியுள்ளார். இதனால் கல்லூரி மாணவர் கண்டக்டர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாச வார்த்தை திட்டியதாக கூறப்படுகிறது.


Asian Games 2023 Live: ஆசிய விளையாட்டு போட்டி; பதக்கங்களை வேட்டையாடும் இந்தியா - ஹாக்கியில் உஸ்பெகிஸ்தானை பந்தாடியது




மேலும் அந்த கல்லூரி மாணவர் அதே பஸ்ஸில் ஏறி, வந்து தனது நண்பர்களுக்கு போன் செய்துள்ளார். அந்த கல்லூரி மாணவரின் நண்பர்கள் குஜிலியம்பாறை பேருந்து நிறுத்தத்தில் அதே பஸ்ஸில் ஏறி உள்ளனர். அங்கிருந்து கிளம்பிய பஸ் கோம்பை பிரிவில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பஸ்சை நிறுத்த சொல்லி கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் தகராறு செய்துள்ளனர்.இதனால் சுதாரித்துக் கொண்ட கண்டக்டர் சிவக்குமார் தனது செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினார். அப்போது அவரை அந்த கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கத் தொடங்கினர். இதனால் பேருந்து இருக்கையில் கீழே விழுந்து சிவக்குமாருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது கண்டக்டரை கல்லூரி மாணவர் மற்றும் நண்பர்கள் தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ரோடு ரொம்ப மோசம்... கால்வாயில் சிக்கிய zomato ஊழியரின் பைக்..! மழைநீர் தேக்கத்தால் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!