வாட்ஸ்அப்பில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி தற்போது ஆண்டராய்டில் பீட்டா பயனர்களுக்கு கொடுக்கப்பட்டு சோதனை நிலைக்கு வந்துள்ளது.


வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்


வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக பல ஆண்டுகளாக அப்டேட் மீது அப்டேட்டாக கொண்டு வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அதில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும் விமர்சனங்களையும் பெரும். அதனால் பீட்டா வெர்ஷன் என்று ஒன்றை உருவாக்கி முன்னரே ஒரு சில பயனர்களிடையே சோதனை செய்து பார்க்கும். அவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தால் அதனை எல்லா பயனர்களுக்கும் வழங்குவது வழக்கம். அதே போல தற்போது வாட்ஸ்அப்பின் ஒரு புதிய அப்டேட் பீட்டா பயனர்களுக்கு வந்துள்ளது. அதுதான் ஸ்டேட்டஸில் வாய்ஸ் நோட் வைப்பது. 



நான்கு மாதங்களுக்கு பிறகு சோதனைக்கு வந்துள்ளது


இது குறித்து அறிவிப்பு வெளியாகி ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகு, இந்த அம்சம் இறுதியாக ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு சோதனையாக கிடைத்துள்ளது. WaBetaInfo அறிக்கையின்படி, வாட்ஸ்அப் தொடர்பான அனைத்து மேம்பாடுகளையும் கண்காணிக்கும் இணையதளம், ப்ளே ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்டு 2.23.2.8க்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டாவை நிறுவுபவர்களுக்கு, வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சம் கிடைக்கும் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்: Munnar: பனிப்பொழிவால் உறையும் மூணாறு.. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்... கவலையில் தேயிலை தோட்டக்காரர்கள்


வாய்ஸ் நோட் ஸ்டேட்டஸ்


வாட்ஸ்-அப் தற்போது புகைப்படங்கள், லிங்குகள், வீடியோக்கள் மற்றும் எழுதப்பட்ட ஸ்டேட்டஸ்களை பகிர அனுமதிக்கிறது, ஆனால் இதுவரை வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸாக பகிரும் வசதியை வழங்கவில்லை. ஆப்பில் உள்ள சமீபத்திய அப்டேட்டின் படி, இப்போது பயனர்கள் தங்கள் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸில் பதிவுசெய்து பகிர அனுமதிக்கிறது. இந்த அம்சத்தைப் பெற்றவர்கள் ஸ்டேட்டஸ் டெக்ஸ்ட் பிரிவில் சிறிய ஐகான் ஆப்ஷனைப் காணலாம். 



வேண்டாமென்றால் டெலீட் செய்யலாம்


இந்த அம்சம் பயனர்கள் தங்கள் குரல் பதிவுகளை ஸ்டேட்டஸில் பகிர்வதற்கு முன், அவர்கள் விரும்பினால், அதை நிராகரிப்பதற்கான விருப்பத்தையும் வழங்குகிறது. அதன் மூலம் பயனர்கள் குரல் பதிவுகளை கேட்டுவிட்டு பகிர வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் 30 வினாடி வரையிலான வாய்ஸ் நோட்டை ஸ்டேட்டஸாக வைக்க முடியும். வாட்ஸ்-அப்பின் ஸ்டேட்டஸ் அம்சம் போலவே இதுவும் சரியாக 24 மணிநேரம் மட்டுமே மற்றவர்களுக்கு காண்பிக்கும். இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தாலும், நேர வரம்புகள் இதிலும் உள்ளன. மேலும், வாட்ஸ்-அப்பின் மெட்டா நிறுவன பயன்பாடான Instagram உட்பட பிற பயன்பாடுகளிலிருந்து வீடியோக்களைப் பகிர இது அனுமதிப்பதில்லை. அதற்குப் பதிலாக வீடியோவின் லிங்கை ஸ்டேட்டஸில் பகிரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.