விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு செயல்பட்டு வருகிறது. இங்கு140 தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப் பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் திருத்தங்கல்லை சேர்ந்த ரவி (வயது 58) என்ற பட்டாசு தொழிலாளி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சாமுவேல் ஜெயராஜ் என்ற தொழிலாளி படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டி பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உள்ளிட்ட 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் சிவகாசி பகுதியில் வசிக்கும் மாயக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதனை விஸ்வநத்தத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வருகிறார். பட்டாசு உற்பத்திக்கு, நாக்பூர் உரிமம் பெற்ற இந்த தொழிற்சாலையில், 50க்கும் மேற்பட்ட அறைகளில் 80 தொழிலாளர்களுக்கு மேல் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இன்று வழக்கம்போல் நடைபெற்ற பணிகளின்போது திடீரென மூலப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் சிக்கி சத்திரப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண்ணும், உடன் பணிபுரிந்த மற்றொரு தொழிலாளியும் பலியானர்கள். 5 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். படுகயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தவிபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிவகாசியில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு ; காயமடைந்தவர்கள் மருத்துமனையில் அனுமதி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்