மூணாறு:


கேரளத்தின் தென் மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம் மூணாறு. கடல் மட்டத்திலிருந்து 1600–1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படக்கூடிய மூணாறு சுற்றுலா பயணிகளை கவர்ந்து ஈர்க்க கூடிய பகுதியாகவும் உள்ளது.


மூணாறு  பகுதிகளில் டிசம்பர்- ஜனவரி மாதங்களில் குளிர் இருப்பது இயல்பு. இந்நிலையில், கடும் பனி பொழிவு சமீப ஒருவார காலமாக தொடர்ந்து நிலவி வருகிறது. மூணாறில் உள்ள சில பகுதிகளில், வெப்பநிலையானது ஜீரோ டிகிரிக்கு கீழே சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்:


இதையடுத்து, அதிகாலையில் பனியை ரசிக்க கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதால் நகரின் சுற்றுலா துறைக்கு இது ஒரு சிறந்த செய்தியாகும்.




மூணாறில் பனிப்பொழிவு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பல புகைப்படங்கள் மற்றும் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், அது பனியாக இருக்க முடியாது. இது மூடுபனி நிலைமைகளாக மட்டுமே இருக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்


கவலையில் சுற்றுலா பயணிகள்


ரிசார்ட்டுகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு நல்ல செய்தி என்றாலும், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் குளிரால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். மூணாறு மலைப்பகுதியில் அதிகம் பயிரிடப்படும் தேயிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை இலைகள் மீது உறைபனி உருகும் போது காய்ந்துவிடும் சூழல் நிலவுகிறது