கூகுள் பே செயலியை பிரபலபடுத்தப்பட்ட அதிகளவு கேஷ்பேக் வழங்கப்பட்டத்தைப்  வாட்ஸ்அப் நிறுவனமும் வாட்ஸ்அப் செயலியில் பணம் பரிவர்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 51 கேச்பேக் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.                  


வாட்ஸ்அப்பில் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் பயனர்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . வாட்ஸ்அப் பயனர்கள் இனி பணப்பரிமாற்றத்திற்கு என்று தனியாக ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை. வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் மட்டும் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த சேவையைச் சோதனை செய்வதால்,  அதனை அதன் ஒட்டுமொத்த பயனர்களின் ஒரு பகுதியினர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றன.  


இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் ரூ. 51 கேஷ்பேக் சலுகையை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், முதலில் மேற்கொள்ளும் 5 பண பரிவர்த்தனைக்கும் ஒவ்வொரு முறையும் ரூ. 51 கேஷ்பேக் சலுகையாக வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் சலுகையைப் பெற குறைந்தபட்ச பண பரிவர்த்தனை  என்று எதுவுமே நிர்ணயிக்கப்படவில்லை. அப்படியானால், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் 1 ரூபாயை மட்டும் பரிவர்த்தனை செய்து, ரூ. 255-ஐ கேஷ்பேக் தொகையாக பெறலாம். வாட்ஸ்அப் பே சர்விஸ் உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் ஏறிவிடும்.     


ID Card For Whatsapp | பரபரப்பு.. Whatsapp யூஸ் பண்றீங்களா? இனிமே ஐடி கார்டு அவசியம்.. ஏன் தெரியுமா?   


முன்னதாக, வாட்சாப் பயனாளர்களுக்கு இந்திய ரூபாய் பட்டனைச் சேர்க்கும் பணியை அந்நிறுவனம் தொடங்கியது. அடுத்தடுத்த வாரங்களில் இந்தியா முழுவதுமுள்ள பயனாளர்கள் அனைவருக்கும் இந்த அம்சம் பயன்படுத்தும் வண்ணம் சேர்க்கப்படும் என வாட்சாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து கூறியுள்ள வாட்சாப் நிறுவனம், வாட்சாப் செயலியில் பணப் பரிவர்த்தனை செய்வது இதன் மூலம் எளிதாக மாற்றப்படுவதோடு, இந்தியர்கள் பெரும்பாலானோருக்குப் புரியும்படியிலான இந்திய ரூபாய் சின்னத்தை பட்டனாக வைத்ததோடு, அதனை வாட்சாப்பின் சேட் கம்போசரில் சேர்த்து, அனைவரும் பயன்படுத்தும் விதமாக மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 


Apple watch | வாட்ச் கட்டுங்க.. ரத்த குளுக்கோஸ் அளவை நாங்க சொல்றோம் - ஆப்பிளின் அசத்தல் திட்டம்?!


வாட்சாப் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் பணப் பரிவர்த்தனைகளுக்கான இயக்குநர் மஹேஷ் மஹாத்மே இதுகுறித்து கூறுகையில், " சுமார் 80 சதவிகிதத்திற்கும் மேலாக இந்தியாவில் பணப் பரிவர்த்தனை, பணமாக பரிமாற்றப்படுகிறது. இந்தியாவில் மூன்றில் இரண்டு பகுதிகள் இன்றும் கிராமப்புறமாக இருப்பதும், டிஜிட்டல் தளங்களில் ஏற்படும் மாற்றங்கள் அனைவரையும் சென்று சேர்வது அடுத்தடுத்த ஆண்டுகளில் நிகழும். `எப்படி பணம் செலுத்துவது’ என்பதற்கான மிக எளிதான வழிமுறைகளை இந்திய மக்கள் தெரிந்துகொள்ள சில தீர்வுகள் தேவை. மேலும் நகர்ப்புற, கிராமப்புற மக்கள் அனைவரும் இதனை நம்பிக்கையோடும், எளிமையாகவும் பயன்படுத்தும் விதமாக, மக்களால் அதிகம் நம்பப்படும் வாட்சாப் செயலி உதவும்’ என்று தெரிவித்தார்.