தொழில்நுட்ப யுகத்தில்  ஸ்மார்ட் வாட்ச் ஒரு முக்கிய கேட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக Apple நிறுவனம் தயாரிக்கும் வாட்ச்களுக்கு சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் டிமாண்டும் உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸில் 6 வது பதிப்பு வரையில் வெளியிட்டுவிட்டது. இந்நிலையில் அடுத்த பதிப்பான Apple வாட்ச் சீரிஸ் 7 - மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.  இந்த புதிய சீரிஸ் வாட்ச் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.  


ஆனால் முந்தைய Apple வாட்ச்சுகளை ஒப்பிடும்போது இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸ் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வெளிவர இருக்கும் ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸ் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கணக்கிடும் வகையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் Asian firms ennostar மற்றும் TAS ஆகிய நிறுவனங்களுடன் கைகோத்துள்ளதாகவும் அதன் மூலம் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 2022 ம் ஆண்டு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. 




வாட்சில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு எல் இடி கைகளில் ஊடுறுவி ரத்த குளுக்கோஸ் அளவை துல்லியமாக கணக்கிடும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இதேபோல ஆப்பிள் வாட்ச் 7 சீர்ஸுக்கும் பல தொழில்நுட்பங்கள் குறித்து தகவல் வெளியானது.. ஆனால் வாட்ச் வெளியான போது அப்படியான தொழில்நுட்பங்கள் ஏதும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில வருடங்களில் Apple ஸ்மார்ட் வாட்ச்சில்  இதய துடிப்பு, எலக்ட்ரோ காடியோகிராம், இரத்த- ஆக்ஸிஜன் அளவை கணக்கிட உதவும் சென்சார்களை Apple நிறுவனம் படிப்படியாக தனது ஸ்மார்ட்வாட்சில் இணைத்துள்ளது. அதனால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் வந்தாலும்  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.


Amazon Festival Sale: Facewash எல்லாம் இவ்வளவு கம்மியான விலைக்கா? குவியுது ஆஃபர்.. Links இங்கே


சமீபத்தில்  Polishing cloth என்ற துணியை ஆப்பிள் விற்பனைக்கு கொண்டு வந்தது. மிருதுவான, சிராய்ப்புகளை ஏற்படுத்தாத பொருள்களால் இந்தத் துணி உருவாக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் துணி ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது. எனினும் இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 1900 ரூபாய். 


ஆப்பிள் வெளியிட்டிருக்கும் பாலிஷிங் துணியின் ஓரத்தில் இந்நிறுவனத்தின் லோகோ இடம்பெற்றிருக்கிறது. எனினும், பிற மைக்ரோஃபைபர் துணிகளுக்கும், ஆப்பிள் வெளியிட்டிருக்கும் துணிக்கும் என்ன வித்தியாசம் என்பதும், இதன் விலை ஏன் இவ்வளவு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பரபரப்பு.. Whatsapp யூஸ் பண்றீங்களா? இனிமே ஐடி கார்டு அவசியம்.. ஏன் தெரியுமா?