ட்விட்டர் ப்ளூ என்று பரவலாக பேசப்பட்ட ட்விட்டர் வெரிஃபைடு வாங்குவதற்கு மாதாமாதம் 8 டாலர் பணம் செலுத்தவேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், அது ப்ளூ மட்டுமல்ல இன்னும் இரண்டு நிறங்கள் என்று புதிதாக அப்டேட் கொடுத்துள்ளார் எலன் மஸ்க்.


ட்விட்டர் வெரிஃபைடு


எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து ஒரே குழப்பமாக திரிகிறது ட்விட்டர் சமூகம். அவர் எப்போது எந்த குண்டை தூக்கி போடுவார் என்ற பரபரப்பிலேயே ட்விட்டர் பயனர்கள் உள்ளனர். வெரிஃபைடு டிக் வாங்க மாதாமாதம் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து பல விவாதங்களை கிளப்பி வரும் நிலையில் இன்னமும் தெளிவான விளக்கம் எதுவும் யாருக்குமே கிடைக்க வில்லை. அப்படியே எதாவது ஒரு அப்டேட்டை அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தங்கள் வட்டாரங்கள் மூலம் அறிந்து செய்தி வெளியிட்டால் அதில் சென்று "அப்படியா?" என்று கேட்டு குட்டையை குழப்பி விடுகிறார் எலன் மஸ்க். அதனால் ட்விட்டரில் இது குறித்த விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. அப்படி ஒரு விவாதத்தின் இடையே வந்து பதில் சொன்ன எலன் மஸ்க்தான் இந்த அப்டேட்டை கூறியுள்ளார். பில் கிளிண்டனின் கீழ் பெர்க்லி பேராசிரியராகவும் தொழிலாளர் செயலாளராகவும் இருந்த அவரது நற்சான்றிதழ்கள் புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதைக் கூற வேண்டும் என்று ராபர்ட் ரீச் தொடங்கிய ட்வீட்டிற்கு பதில் கூறும் த்ரெட்டில் மஸ்க் இந்த செய்தியை வெளியிட்டார். 






மூன்று நிற டிக்குகள்


மஸ்க் ட்விட்டர் வெரிஃபைடுக்காக மாதம் $8 கோரியதில் கோபம் அடைந்த ரீச் மஸ்கை அவதூறாக பேசினார். இதனிடையே பேசிய க்ரிப்டோ கிங் என்னும் கணக்கிற்கு எலன் மஸ்க் பதிலளித்தார். அப்போது, "தாமதத்திற்கு மன்னிக்கவும், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வெரிஃபைட்டை தற்காலிகமாகத் தொடங்குகிறோம். நிறுவனங்களுக்கான தங்க நிற டிக், அரசாங்கத்திற்கான சாம்பல் நிற டிக், தனிநபர்களுக்கான நீல நிற டிக் (பிரபலம் மற்றும் பிறர்) என்று மூன்று விதமான டிக்குகளுடன் அமல்படுத்தப்படும். சிரமமான காரியம் தான். ஆனால் செய்துதான் ஆக வேண்டும்." என்று அவர் கூறியிருந்தார்.


தொடர்புடைய செய்திகள்: "என்னைப்போல் ஒருவன்"- வெகுண்டெழுந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி! என்ன நடந்தது?


ஏற்கனவே சரிபார்த்தது சரியல்ல


பிரபலங்கள், "குறிப்பிடத்தக்க" நபர்கள் மற்றும் இரு தரப்பட்ட வண்ணங்கள் என்று பிரித்து மீண்டும் ஒருமுறை எல்லோரையும் முதலில் இருந்து வெரிஃபை செய்வதன் மூலம் பழைய ட்விட்டரின் சரிபார்ப்பு முறையின் மீதான தனது வெறுப்பை மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார். "அனைத்து சரிபார்க்கப்பட்ட தனிப்பட்ட மனிதர்களும் ஒரே நீல நிற சரிபார்ப்பைக் கொண்டிருப்பார்கள். தனிநபர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பால் வெறிஃபை செய்யப்பட்டால், அவர்கள் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டும் இரண்டாம் சிறிய லோகோவைக் கொண்டிருக்கும். இது குறித்து அடுத்த வாரம் நீண்ட விளக்கம் கொடுப்போம்.” என்றார்.






கூடுதல் விவரங்கள் எப்போது?


விடுமுறை வார இறுதிக்குப் பிறகு கூடுதல் விவரங்கள் வரும் எனத் தெரிகிறது, அதாவது ட்விட்டரின் எஞ்சியிருக்கும் பின்தளப் பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு இது விடுமுறை வார இறுதியாக இருக்காது. அந்த ரிப்ளையில், ஆள்மாறாட்டத்திற்கு எதிரான தனது வலுவான நிலைப்பாட்டை மஸ்க் மீண்டும் வலியுறுத்தினார். "வேண்டுமென்றே ஆள்மாறாட்டம் / ஃபேக் அக்கவுண்ட் இடைநீக்கத்திற்கு வழிவகுக்கும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். "நிறுவன இணைப்பு, பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆகியவை உண்மையான அதே பெயரைக் கொண்ட நபர்களிடையே வேறுபடுகின்றன. அது எப்படிப் போகிறது என்று பார்ப்போம்." என்று மேலும் கூறியுள்ளார்.