Sanju Samson: இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.   


இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. கடைசி ஆட்டம் டிஎல்எஸ் முறைப்படி டிரா ஆனது. இந்நிலையில், முதல் ஒரு நாள் ஆட்டம் இரு அணிகளுக்கு இடையே கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. இதில், இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் முதலில் விளையாடிய இந்திய 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளைாயடிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 3  விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் விளையாடினார். அவர் 38 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். 4 பவுண்டரிகளையும் அவர் விளாசி இருந்தார். 






இன்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படவில்லை. இந்த போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டுக் கொண்டு இருக்க, மைதானத்தை பராமரிக்கும் ஊழியர்கள் தார்ப்பாயைக் கொண்டு பிட்சை மூடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சஞ்சு சாம்சன் அவர்களுக்கு உதவும் விதமாக தார்ப்பாயை பிடித்தார். இதனை வீடியோவாக பதிவிட்ட ரசிகர் ஒருவர், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது.  இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. 


ஏற்கனவே கடந்த சில நாட்களாக டிவிட்டர் பக்கதில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் நிலையான இடம் அளிக்கப்படவேண்டும் என அவரது ரசிகர்களும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் கூட சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சஞ்சு சாம்சன் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறார்.