Whatsapp Feature : வாட்ஸ் அப்பில் புகைப்படங்களை அனுப்புவதில் புதிய வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
வாட்ஸ்-அப் செயலி:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுவும் பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு இந்த அப்டேட்கள் அடுத்தடுத்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய அப்டேட்:
புதியதாக வழங்கப்பட உள்ள அப்டேட்டின் மூலம், ஒருவருக்கு நாம் பகிரும் போட்டோ, வீடியோ, ஆடியோ போன்றவைகளுடன் description மெசேஜை சேர்ந்து அனுப்பும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. முன்னதாக, நமது phone gallery-யில் இருந்து பகிரப்படும் போட்டோ, வீடியோக்களுக்கு மட்டுமே இந்த descriptions ஆப்ஷன் இருந்தது.
தற்போது, அது forward message ஆப்ஷனுக்கு விரைவில் வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. forward செய்யப்படும் ஒவ்வொரு போட்டோ, வீடியோக்களுக்கும் இந்த description ஆப்ஷன் உதவும். இதன் மூலம் எதற்காக இந்த தகவலை அனுப்புகிறோம் என்பதை பயனர்கள் எளிதில் அறிந்துக் கொள்ள முடியும். தற்போதைய சூழலில் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெற, விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அண்மையில் வந்த மற்ற அப்டேட்கள்:
வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. வழக்கமாக வாட்ஸ் அப்பில் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்கும்படி இருந்தது- இதில் வீடியோக்களை அதிகபட்சமாக 30 விநாடிகள் மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும்.
இந்த வீடியோ ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் தானாகவே டெலிட் ஆகிவிடும். அதே போல இனி வாய்ஸ் நோட்களையும் 30 நொடிகள் ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அம்சம் நேற்று முதல் பயனர்களுக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அத்துடன் இந்த வாய்ஸ் மெசேஜ் ஸ்டேட்டஸை யார் பார்க்க வேண்டம் என்பதையும் பயனர்கள் நிர்வகித்துக் கொள்ளும் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பிறந்தநாள் விழாவில் தகராறு... துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 20 பேர் உயிரிழப்பு... நடந்தது என்ன?