உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.50 கோடியாக உயர்ந்துள்ளது.


கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று சீனாவில் பரவத் தொடங்கியது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. தடுப்பூசிகள் பயன்பாடு மற்றும் விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகள் காரணமாக பெருந்தொற்று ஒரு வழியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


2022 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வந்தது. உலகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது. பீஜிங் பகுதியில் தினசரி பாதிப்பு என்பது 36,000 கடந்து பதிவானது. அப்போது சீனாவின் சீரோ கோவிட் பாலிசி காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வலுத்த காரணத்தால் அதன் zero covid policy கொள்கையை தளர்த்தியது சீனா.


உலகெங்கிலும் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. உலகெங்கிலும் தினசரி தொற்று பாதிப்பு 58,234 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த மாதத்தை ஒப்பிடும் போது பாதிப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து பதிவானது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி 38,50,054 போருக்கு ஒரே நாளில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொற்றி பாதிப்பு பரவ தொடங்கியதிலிருந்து அதிகபட்ச தினசரி பாதிப்பு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68  கோடியே 56 லட்சத்து 54 ஆயிரத்து 061 ஆக அதிகரித்துள்ளது. அதில் 2 கோடியே 4 லட்சத்து 27 ஆயிரத்து 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 68 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் 66 கோடி 52 லட்சத்து 267 ஆயிரத்து 05 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 68 லட்சத்து 42 ஆயிரத்து 498 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


39,554 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20, 387, 802 பேர் லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 99 சதவீதம் பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் 1 சதவீதம் மட்டுமே உயிரிழப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 465 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  


TN Corona Spike: தினசரி பாதிப்பு 500க்கும் மேல் பதிவு..! அதிகரிக்கிறதா கொரோனா..? தமிழ்நாட்டில் நிலவரம் என்ன?


காலை நடைபயற்சிக்கு சென்ற நபர்: கடித்து குதறிய தெரு நாய்கள்: அதிர வைக்கும் சிசிடிவி காட்சி - உ.பியில் பரிதாபம்!