விண்வெளியில் இருந்து பூமிக்கு அவப்போது விண்கல்கள் அல்லது எரி நட்சத்திரங்கள் வருவது வழக்கம். அவற்றில் சில பூமிக்கு அருகே வந்தவுடன் வெப்பம் மாற்றம் காரணமாக எரிந்துவிடும். ஒரு சில விண்கல்கள் மட்டுமே பூமிக்கு உள்ளே வரும். அவ்வாறு வரும் பட்சத்தில் அவற்றை வானில் காண்பது நமக்கு நல்ல அனுபவமாக அமையும். அந்தவகையில் தற்போது ஒரு காட்சி ஒன்று இந்தியாவில் நடைபெற்றது. 


இந்நிலையில் நேற்று இரவு மகராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் விண்கல் ஒன்று பயணம் செய்வது போல் வானில் தெரிந்தது. இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் வானில் ஒரு காட்சி தென்பட்டது. இந்தக் காட்சிகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் தீ பிளம்பு போல் ஒரு ஒளி தென்படுகிறது. அது பார்ப்பதற்கு விண்கல் எரிந்து கொண்டு பயணிப்பது போல் தோன்றுகிறது. 






இந்த விண்கல் குறித்து அமெரிக்க விஞ்ஞானி ஜோனதன் மெக்டோவல் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், “இது சீனா கடந்த 2021ஆம் ஆண்டு விண்ணில் செலுத்திய ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது. சீனாவின் சாங் ஸெங் 3 பி ஒய் 77 என்ற ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது. அது இந்தியா பகுதி அருகே பூமிக்குள் நுழைந்து எரிந்துள்ளது ” எனத் தெரிவித்துள்ளார். எனினும் நேற்று இரவு இந்தியாவை கடந்தது விண்கல் தான என்பது தொடர்பாக அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வீடியோவை பலரும் ட்விட்டரில் பகிர்ந்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 




மேலும் படிக்க:Gmail பயனாளர்களா நீங்க? உங்களுக்கு 7 ட்ரிக்ஸ் சொல்லப்போறோம்.. இதைப் பாருங்க..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண