மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஜி மெயியில் Advance search, undo send, Colour coded stars  போன்ற பல்வேறு டிரிஸ்கள் உள்ளது. இதன் மூலம் மிகவும் எளிதாக நாம் ஜிமெயிலைப் பயன்படுத்தலாம்.


உலகம் முழுவதும் மக்கள் கல்வி, தொழில்சார்ந்த விஷயங்கள் என பலவற்றிற்கு அதிகம் பயன்படுத்துவருகின்ற மின்னஞ்சல்  சேவைகளில் ஒன்று தான் ஜிமெயில். அலுவலக மற்றும் தனிப்பட்ட விஷயங்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் அஞ்சலத்தை நாம் நாடியிருந்தோம். ஆனால் நம்முடைய வாழ்க்கை முறையை மிகவும் எளிதாக்கியது ஜிமெயில் தான். ஆம் நொடியில் யாருக்கு வேண்டுமானாலும் முக்கியமான தகவல்களை சென்ட் செய்துவிடலாம். இப்படி மக்களுக்கு மிகவும் எளிதாக உள்ள ஜிமெயில் யாரும் அறியாத 7 டிப்ஸ்கள் குறித்து இங்கே நாம் தெரிந்துக்கொள்வோம். இது நிச்சயம் அனைவருக்கும் மிகுந்தப் பயனுள்ளதாகவே இருக்கும்.


முதலில், Advanced Search:


கூகுளில் ஏதாவது ஒரு விஷயத்தைத் தேடுவது போல தான் ஜிமெயில் நமக்குத் தேவையான மற்றும் நாம் ஏற்கனவே அனுப்பியுள்ள விஷயங்களைத் தேடுவதற்காக Gmail இன் அட்வான்ஸ்டு சேர்ச் ஆப்ஷன் உள்ளது. இது உங்களுக்கு search விருப்பத்தை சிறியதாக்கி, எளிதாக ரிசல்ட் கிடைத்திட உதவியாக உள்ளது.


Advanced Search ஆப்சனைப் பயன்படுத்தி நீங்கள் தேட விரும்பும் மெயிலைக் கண்டறிய search பாக்ஸில் சிம்பிளி கிவேர்டு கொடுக்கலாம். இல்லையென்றால் பில்டர் பட்டனைக் கிளிக் செய்து அட்வான்ஸ் ஆப்சன் மூலம் எளிதாக கண்டறியலாம். குறிப்பாக நீங்கள் தேட விரும்பும் நபரின் மெயிலை கண்டறிய, அந்த நபரின் மெயில் ஐடியும் டைப் செய்துக்கொள்ளலாம். இதோடு நீங்கள் Advanced Search ஆப்சனைப் பயன்படுத்தி தேடும் போது ஆப்ஷனில் சைஸ், தேதி, அட்டாச்மென்ட் இருக்கும் மெயில் அவ்வது இல்லாத மெயில்  என வகைப்படுத்தி தேடும் வசதி உள்ளது.





Confidential mode


வாட்ஸ் அப்பில் உள்ளது போல் ஜிமெயிலும் Confidential mode என்ற ஆப்சன் உள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நீங்கள் செய்யும் மெசேஜ் மறைவது போலவே, மெயிலும் மறைந்துவிடும்.


நீங்கள் யாருக்காவது மெயில் அனுப்ப தயாரானதும், send என்ற பட்டன் இருக்கும் இடத்தில் Lock and clock என்ற பட்டனைக்காண முடியும். இதனைப்பயன்படுத்தி நீங்கள் அனுப்பும் மெயிால் அனுப்ப வேண்டிய நேரத்தைத் தீர்மானிக்க முடியும். இவ்வாறு நீங்கள் மேற்கொள்ளும் போது, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு, மெயில் அனுப்பியவரால் காணவே அல்லது கன்ட்ன்ட்களும் சேவ் செய்திடவும்  முடியாது.


Undo send


நீங்கள் அவசரத்தில் அனுப்பிய மெயில் ஏதேனும் தவறாக இருப்பதைக் கண்டறிந்தால், உடனு அதனை Undo send ஆப்சனைப்பயன்படுத்தி டெலிட் செய்துவிடலாம்.


நீங்கள்  Send பட்டன் கிளிக் செய்ததும், திரைக்கு கீழே Undo send பட்டன் திரையில் தோன்றும். அந்த பட்டன் தோன்றும் நேரத்தை நீங்கள் நிர்வகிக்கலாம். ஜிமெயில் settingsஇல் எவ்வளவு நேரம் மெயில் அனுப்பியபிறகு அந்த பட்டன் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். சிம்பிளாக, நீங்கள் மெயில் அனுப்பியதும், அந்த Undo பட்டன் கிளிக் செயதால், மெயில் ரிட்டன் ஆகிவிடும்


Writing suggestions


ஜிமெயில் நீங்கள் டைப் செய்கையில், ஸ்மார்ட் கம்போஸ் அல்லது ரைட்டிங் வசதிகள் மூலம், நீங்கள் விரைவாக டைப் செய்திட சில பொதுவான வாக்கியங்கள் பரிந்துரைகள் திரையில் தோன்றும். இதனை நீங்கள்   Gmail Setting கsஇல் Smart Compose ஆப்ஷனைக் காணலாம். அதனை ஆன் செய்வதன் மூலம், எழுதுகையில் பரிந்துரைகளைக் காணலாம்.


உதாரணமாக, நீங்கள்  try this, hope this போன்ற ஏதாவது ஒன்றை செய்யும் போது, அதனைத்தொடர்ந்து நீங்கள் டைப் செய்யவுள்ள வார்த்தை உங்களது திரையில் தோன்றும். ஒரு வேளை அந்த வார்த்தை சரியாக இருந்தால், உடனே Right arrow press செய்தால், அவரைத் தானாகவே நமது வார்த்தைக்கு அடுத்து வந்துவிடும். இவ்வாறு நீங்கள் மேற்கொள்ளும் போது உங்களது நேரம் மிச்சமாகக்கூடும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.


Mute conversation


அடுத்தது Mute conversation ஆப்சன். இது பெரும்பாலோனருக்கு மிகவும் பயன்படுத்தும் என்றே சொல்லலாம். ஆம் உங்களுக்கு ஜிமெயிலில் சம்பந்தமில்லாம மெயில்கள் தொடர்ச்சியாக வருகிறது என்றால், அதனை நீங்கள் மியூட் செய்திட முடியும்.


இதனை நீங்கள் மேற்கொள்வதற்கு முன்னதாக , நீங்கள் சம்பந்தப்பட்ட மெயிலை செலக்ட் செய்து, இன்பாக்ஸ் பாரில் உள்ள 3 டாட் மெனுவை கிளிக் செய்தால் உங்களுக்கு மியூட் பட்டனைக்காணமுடியும். இதனை கிளிக் செய்தாலே தேவையில்லாத மெயில் உங்களுக்கு வர வாய்ப்பில்லை.


இதோடு Mark as read, Mark as important போன்ற ஆப்ஷன்களும் இடம் பெற்றிருக்கும். ஒரு வேளை இதுவும் தேவையென்றால் இதனையும் நீங்கள் கிளிக் செய்துக்கொள்ளலாம்.


 Colour coded stars


நாம் ஜிமெயில் முக்கியமான மெசேஜ்களைக் கண்டறிய, ஸ்டார் ஆப்ஷனை உபயோகிப்பது வழக்கம். இதுஒருபுறம் இருந்தாலும், ஜிமெயில் வெவ்வேறு நிறங்களில் ஸ்டார் ஆப்ஷன் வைக்க முடியம் என்பது உங்களுக்குத் தெரியுமா?


ஆம்  நீங்கள் அலுவலக ரிதியான மெயில்களுக்கு ஒரு நிறத்திலும், தனிப்பட்ட மெயிலுக்கு மற்றொரு நிறத்தில், வெறு தளத்தில் இருந்து வரும் மெயிலுக்கு தனி நிறத்திலும் ஸ்டார் அம்சத்தை வைக்கலாம். இது நிறைய ஸ்டார் மெசேஜ்களில் உங்களுக்கானதை எளிதாக கண்டறிய நிச்சயம் உதவியாக இருக்கும்.


இதற்கு முதலில் multiple coloured stars ஆப்ஷனை ஆன் செய்திட, நீங்கள் முதலில் gmail settings இல் star அம்சத்தில் drag the coloured stars லிஸ்ட்டில் ‘Not in use’ sectionஇல் இருப்பதை In use’ sectionக்கு மாற்ற வேண்டும். இதனையடுத்து நீங்கள் உங்களுக்கான மெயில்களை கலர்கள் அடிப்படையில் பிரித்துக்கொள்ளமுடியும்.



Change tab layout


personal and office மெயில்களுடன் சேரக்கூடாது என்பதற்காக Gmail’s default layout இல் social and promotional ரீதியான மெயில்கள் தனி செக்ஷனில் இருக்கும். ஒருவேளை  நீங்கள் இதனை மாற்ற  விரும்பினால் டெப்களை மாற்றியமைக்கலாம்.


முதலில்  Gmail Settings இல் Inboxக்கு சென்று Categories இல் மாற்றிக்கொள்ளாம். இதன் மூலம் உங்களுக்கு எந்த டெப் ஜிமெயில் வந்ததும் தெரியவேண்டும் என்பதை  இதனைப் பயன்படுத்தி முடிவு செய்துக்கொள்ளலாம்.