நவீன்-உல்-ஹக் இரண்டு வாரங்களாக அணியின் பிளேயிங் 11-இல் இல்லாமல் இருந்தார். ஏனென்றால் மே - 1 ஆம் தேதி நடந்த சம்பவம் அப்படி. பெங்களூரு அணியுடனான போட்டி அனல் பறந்த நிலையில் போட்டி முடிந்தும் தொடர்ந்தது. விராட் கோலி உடன் லக்னோ அணியின் இயக்குனர் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட மைதானம் பரபரப்பானது. அதே வேளையில் வந்து சிக்கியவர்தான் நவீன் உல் ஹக். விராட் கோலியின் கைகளை பிடித்து பேசியது, அவருடன் சமாதானம் பேச வர மறுத்தது என அவர் பங்குக்கு அவரும் தெனாவெட்டு காட்ட, இந்த பஞ்சாயத்து பரபரப்பானது. 



சண்டைக்கு காரணம் என்ன?


இதற்கெல்லாம் காரணம் கம்பீர் அதற்கு முந்தைய போட்டியில் ஆர்சிபி அணி ரசிகர்களை அமைதியாக இருக்க சொல்லி வாயில் கை வைத்து காட்டியதுதான். அந்த போட்டியில் பெங்களூரு அணி தோற்றிருந்தது. இந்தநிலையில் அந்த இரு அணிகளும் இரண்டாவது முறை மோதியபோது கோலி உக்ரமாக இருந்தார். அவர் ஆர்சிபி ரசிகர்களை அமைதியாக இருக்க வேண்டாம் சத்தம் எழுப்புங்கள் என்று கம்பீருக்கு பதிலடி கொடுப்பது போல சைகை செய்தார். இதுவே பிரச்சினைக்கு தொடர்ந்து வித்திட்டது.


தொடர்புடைய செய்திகள்: Spurious Liquor Death: ‘என் நிலைமை இனி யாருக்கும் வரக்கூடாது’.. கதறும் மனைவி...தாலியை பிடுங்கிச் சென்று சாராயம் குடித்தவர் உயிரிழப்பு


நவீன் உல் ஹக்


இதற்கு இடையே சிக்கிய நவீன் உல் ஹக்கை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து தள்ளினர். கே.எல்.ராகுல் காயம் அடைந்ததால், டி காக் ஆடியாக வேண்டிய சூழல் வந்தது. 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடமுடியும் என்பதால், நவீன் உல் ஹக் அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டத்தில் சேர்க்கப்படவும் இல்லை. அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் தான் அதன்பிறகு பந்து வீச வந்தார். புதிய பந்தில் பந்து வீச வந்த அவரை ரசிகர்கள் கிண்டல் செய்யத் தொடங்கினர். 






கோலி பெயரை சொல்லி கோஷம்


அவர் வந்தபோது, ​​ரசிகர் கூட்டம் "கோலி, கோலி" என்று கோஷமிடத் துவங்கினர். பவர்பிளேயில் அவர் வீசிய இரண்டு ஓவர்களில் 16 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதிலும் நவீனின் இரண்டாவது ஓவரில் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸரை விளாச, இஷான் கிஷன் ஒரு பவுண்டரி அடித்தார். ரோஹித், அவர் மெதுவாக வீசிய பந்தை ஸ்கொயர் லெக்கில் 65-மீட்டர் சிக்ஸராக ஃபிளிக் செய்து மாற்ற, அப்போதும் 'கோலி… கோலி…' என்று கத்தினர். அதே போல அவர் அடுத்த ஓவரை வீச வரும்போதும் கோலி கோலி என்று ரசிகர்கள் கோஷமிட்டனர். இதே போல கடந்த ஆட்டங்களில் கம்பிரை பார்க்கும்போதெல்லாம் 'கோலி கோலி' என்று ரசிகர்கள் கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.