இனிபினிக்ஸ் நிறுவனம்
சீனாவை சேர்ந்த இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் மாடல்கள், சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அண்மையிலும் அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக, ஹாட் சீரிஸ் வரிசையில் Infinix Hot 20 5G செல்போன் சர்வதேச சந்தையில் வெளியானது. சுமார் ரூ.15,000 மதிப்பிலான இந்த செல்போன் மாடல், இந்திய சந்தையில் வரும் டிசம்பர் 1ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.
ரூ.13,999-ல் புதிய ஸ்மார்ட் டிவி:
இந்நிலையில் தான் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு மத்தியில், ஸ்மார்ட் டிவி மற்றும் லேப்டாப் போன்ற பல சாதனங்களையும் அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக, இன்பினிக்ஸ் Y1 சீரிஸ் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி-க்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக 32 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 43 இன்ச் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை ஸ்மார்ட் டிவி மாடல்களில் ஒன்றாகும். அதில் FHD டிஸ்ப்ளே, 20 வாட் டால்பி ஸ்டீரியோ என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 25ம் தேதி முதல் இன்பினிக்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
43- இன்ச் எல்இடி ஸ்கிரீன், 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், நெட்ஃப்ளிக்ஸ், ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம், 20 வாட் டால்பி ஸ்டீரியோ யூடியூப், FHD ரெசல்யூஷன், குவாட் கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், பிரைம் வீடியோ ஹாட் கீ கொண்ட ரிமோட் ஸ்கிரீன் மிரரிங் வசதி, 2x HDMI போர்ட், 1 ARC சப்போர்ட், 2x USB போர்ட்கள், 1 RF இன்புட், ஹெட்போன் ஜாக், 1 COAX அவுட், LAN, வை-பை மற்றும் ப்ளூடூத் என பல வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. BLUE LIGHT உமிழ்வால் ஏற்படும் கண்களுக்கான பாதிப்பை தடுக்க புதிய அம்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை இணைக்கு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
அடுக்கடுக்கான பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட் டிவியின் விலை வெறும் ரூ.13,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.