சாம்சங் Galaxy Tab S7 FE மற்றும் A7 lite ஆகிய இரண்டு மாடல்களை தற்போது வெளியிட்டுள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் 1938ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. ஆடைகள், மருத்துவ உபகரணங்கள், வீட்டிற்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் மற்றும் செல் போன்கள் என்று பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது சாம்சங் நிறுவனம். உலக அளவிலும் இந்திய அளவிலும் சாம்சங் நிறுவனம் செல் போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது என்றால் அது மிகையல்ல. 


Samsung Galaxy Tab S7 FE 






சாம்சங் வெளியிட்டுள்ள இந்த கேலக்ஸி டேப் 12.4 இன்ச் எல்.சி.டி டிஸ்பிளே கொண்டது, மேலும் 16:10 அஸ்பெக்ட் 
ரேஷியோ இதில் சப்போர்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5ஜி டேப்லெட் 608 கிராம் எடை கொண்டது, Android 11 தளத்தில் செயல்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா கோர் சிப் செட் பொருத்தப்பட்டுள்ள இந்த டேப் 4 ஜிபி RAM கொண்டது. 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் மைக்ரோ எஸ்டி பொருத்தும் வசதியும் உள்ளது. 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 10,090 மெகாவாட் பேட்டரி சப்ளை கொண்ட இந்த டேப்லெட்டுடன் 15W சார்ஜ்ர் கொடுக்கப்படுகின்றது. தேவைப்படும் பட்சத்தில் 45W பாஸ்ட் சார்ஜிங் கருவியை பயனாளர்கள் தனியாக பெற்றுக்கொள்ளலாம். 


Galaxy Tab A 7 Lite 


இந்த Galaxy A7 டேப்லெட் 8.7 இன்ச் டிஸ்பிலே கொண்டது. ஹெலியோ P22T சிப்செட் கொண்ட இந்த கருவியில் 3 ஜிபி RAM உள்ளது. மேலும் டூயல் ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி மற்றும் 5,100 mAh திறன் கொண்ட பேட்டரி அளிக்கப்பட்டுள்ளது. 


நிறம் மற்றும் விலை.


Samsung Galaxy Tab S7 FE மிஸ்டிக் பிளாக், மிஸ்டிக் சில்வர், மிஸ்டிக் க்ரீன் மற்றும் மிஸ்டிக் பிங்க் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் 46,999 ரூபாய்க்கும். 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் 50,999 ரூபாய்க்கும் விற்பனையாகவுள்ளது. 


Battle Ground Pubg: 'கவனம்.. பஞ்சாயத்துனா தடை தான்' பேட்டில்கிரவுண்ட் கேள்விக்கு ஆர்டிஐ பதில்!


Samsung Galaxy Tab A7 க்ரே மற்றும் சில்வர் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் 3 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டேப் 14,999 ரூபாய்க்கும். Wifi வசதி மட்டும் உள்ள மாடல் 11,999க்கும் விற்பனையாகவுள்ளது. வரும் ஜூன் மாதம் 23ம் தேதி முதல் இந்த டேப்லெடகள் விற்பனைக்கு வருகின்றது.