பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வேறு பெயருடன் களம் இறங்கியது பப்ஜி. கடந்த மாதம் பப்ஜியின் இந்திய பதிப்பின் பெயரை "BATTLE GROUND INDIA” என அந்நிறுவனம் அறிமுகம் செய்தது . புதிய பெயருடன் முன்பதிவை தொடங்கிய  Battlegrounds Mobile India கூகுள் ப்ளே ஸ்டோரில் களம் இறங்கியது. ஒருமாதமாக ரிலீஸ் தேதி எப்போது என அறிவிக்கப்படாத நிலையில் புதிய அறிவிப்புகள், பரிசுகள், டீசர்கள் என களைகட்டியது சோஷியல் மீடியா. 


இந்நிலையில் பேட்டில்கிரவுண்ட் அதிகாரபூர்வமாக களம் இறங்கியது. கேம் விளையாடும் ஒவ்வொரு முறையும் ஓடிபி எண்ணை பயன்படுத்தி மட்டுமே உள்ளே நுழைய முடியும், ஒருவர் தனது பெயரில் 10  அக்கவுண்ட் வைத்துக்கொள்ளலாம்,ஒரு நாளைக்கு 10 முறை மட்டுமே ஓடிபிக்காக விண்ணப்பிக்கலாம் என்ற புதிய முறையெல்லாம் கொண்டு வரப்பட்டுள்ளது. லாக்டவுன் காலத்தில் கேம் பிரியர்களுக்கு கொண்டாட்டமாகவே வந்துள்ளது பேட்டில்கிரவுண்ட். 




இந்நிலையில் பேட்டில்கிரவுண்டை இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் டவுன்லோட் செய்துள்ளனர் என அந்நிறுவனமான ராப்டான் தெரிவித்துள்ளது. இது குறித்து நோடிபிகேஷன் மூலம் இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அந்நிறுவனம், விளையாட்டுக்கான பரிசுகளையும் வழங்கியுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள அந்நிறுவனம், ‘ நன்றி இந்தியா. 5மில்லியன் டவுன்லோடின் கொண்டாட்டம். நாங்கள் ஒரு பரிசு மூலம் நன்றியை சொல்கிறோம். மகிழ்ச்சியாக இருங்கள் என தெரிவித்துள்ளது.


ரூ 2500 க்கு ஸ்மார்ட்போன்? - ஜியோவின் அடுத்த மெகா ப்ளான்!


5 மில்லியன் டவுன்லோட் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.செயலிகள் மூலமாக  இந்தியாவை  சீனா உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில் முக்கியமானது பப்ஜி. பல்வேறு விமர்சனங்களுக்கு நடுவே கொடிகட்டிப்பறந்த பப்ஜி ஒரே நாளின் காணாமல் போனது. அதன்பின் பப்ஜியின் இடத்தைப் பிடிக்க பல கேம்கள் போட்டிப்போட்டன. 




CALL OF DUTY, FAUG-G  என நிறைய மொபைல் கேம் வந்தது. ஆனால் பயனில்லை . இந்திய இளசுகளிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த பப்ஜியின் இடத்தை வேறு கேம்களால் நிரப்பவே முடியவில்லை. இந்நிலையில்தான் மீண்டும் பப்ஜி மாதிரியான பேட்டில்கிரவுண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டது அந்நிறுவனம். அப்போது முதலே வழிமேல் விழி வைத்துக் காத்துக்கிடந்தனர் பப்ஜி ரசிகர்கள். இந்த நிலையில் லட்சக்கணக்கில் டவுன்லோட் செய்து விளையாடி வருகின்றனர். முன்பதிவே 20மில்லியனுக்கு அதிகமாக செய்யப்பட்ட பேட்டில்கிரவுண்ட்  இதுவரை iOsல் பேட்டில்கிரவுண்ட் அறிமுகம் செய்யப்படவில்லை. அந்த வகையில் 5மில்லியன் டவுன்லோட் என்ற இலக்கை கடந்துள்ளது பேட்டில்கிரவுண்ட்.


மூன்று வண்ணங்களில் Mi 11 Lite : அப்டேட் கொடுத்த ஜியோமி நிறுவனம்..!