இணையவழி பணப்பரிவர்த்தனை செய்வதற்கு இந்தியாவில் பிரபலமான செயலிகளில் ஒன்றாக விளங்குவது பே.டிஎம்.(paytm). தற்போது, ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். தொடரை முன்னிட்டு பே டி.எம். தனது பயனாளர்களுக்கு ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.


நடப்பு ஐ.பி.எல். சீசனின்போது செல்போன்களுக்கு பே டி.எம். மூலமாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு பே டிஎம் நிறுவனத்தின் கேஷ்பேக் மற்றும் பிற வெகுமதிகள் பெறுவதற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு நாளும் முதல் 1000 பயனாளிகளுக்கு ஐ.பி.எல். போட்டி நடைபெறும்போது, இன்னிங்ஸ் இடைவெளியின்போது தங்கள் மொபைல் போன் எண்களை ரீசார்ஜ் செய்வதில் 100 சதவீதம் வரை கேஷ்பேக் ( ரூபாய் 50 வரை) கிடைக்கும்.




இந்த சலுகை ஜியோ, வோடபோன்-ஐடியா (விஐ), ஏர்டெல், பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவற்றில் இருந்து ரூபாய் 10 மற்றும் அதற்கு மேல் செய்யும் அனைத்து ரீசார்ஜ்களுக்கும் பொருந்தும். புதிய பயனாளிகள் 1 ஜிபி டேட்டா ரீசார்ஜ் தொகைக்கு சமமான கேஷ்பேக்கை ரூபாய் 11, ரூபாய் 21, ரூபாய் 51 மதிப்புள்ள ஜியோ டேட்டா பேக்குகளின் மீதும் ரூபாய் 16 மற்றும் ரூபாய் 48 மதிப்புள்ள வோடபோன் பேக்குகளின் மீதும் ரூபாய் 48 மதிப்புள்ள ஏர்டெல் பேக்குகளின் மீதும் பெறுவார்கள்.


இச்சலுகைகள் ஐ.பி.எல். போட்டிகளின் போது தினமும் இரவு 7.30 மணி முதல் 11 மணி வரை கிடைக்கும். ஒவ்வொரு ரீசார்ஜிலும் அவர்கள் உறுதியான கேஷ்பேக் புள்ளிகளைப் பெற்று, சிறந்த பிராண்டுகளின் அற்புதமான சலுகைகளாகவும் மற்றும் பரிசுக்கூப்பன்களாகவும் மாற்றிக்கொள்ள முடியும். பே டிஎம் தனது பயனாளிகளுக்கு அதிக வசதியை கொண்டு வரும் வகையில், சமீபத்தில் தனது மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.




இதன்படி, 3 கிளிக் ரீசார்ஜ், ரீசார்ஜ் பிளான்கள் பற்றிய தகவல்கள் போன்றவற்றை மேம்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பே டிஎம்-என் செய்தித் தொடர்பாளர் மொபைல் ரீசார்ஜ்கள் பேடிஎம்-எல் மிகவும் பிரபலமான சேவைகளில் ஒன்றாகும். தற்போது வரவிருக்கும் கிரிக்கெட் சீசனில் நாங்கள் எங்கள் பயனாளிகளுக்கு 100 சதவீதம் வரை கேஷ்பேக் சிறப்பு சலுகை கொடுப்பதன் மூலம் ஒரு சிறப்பு உத்வேகம் அளித்து அவர்களுடன் விளையாட்டை கொண்டாட விரும்புகிறோம் என்று கூறினார். பேடிஎம் நிறுவனத்தின் இந்த புதிய சலுகை அறிவிப்பால் பேடிஎம் பயனாளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பலரும் இந்த சலுகையால் பயன்பெற்று வருகின்றனர்.


மேலும் படிக்க : கம்பெனிக்கு லோன் தாங்க.. இல்லன்னா போனஸ் கிடையாது: ஊழியர்களிடம் கையேந்திய பிரபல நிறுவனம்!