Realme P3 Pro 5G 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடலானது ரூ.23,999க்கு விற்பனைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.
Realme P3 Pro 5G Vs Realme P3X 5G:
Realme P3X 5G உடன், P சீரிசின் ஒரு பகுதியாக, Realme P3 Pro 5G திங்களன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு சாதனங்களும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. Realme P3 Pro 5G ஆனது Snapdragon 7s Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, P3X 5G சமீபத்தில் வெளியிடப்பட்ட MediaTek Dimensity 6400 SoC உடன் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 15 இல் இயங்குகின்றன மற்றும் Realme UI 6.0 உடன் வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது விற்பனை:
Realme P3 Pro 5G மொபைலானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மாடலானது ரூ.23,999 இல் தொடங்குகிறது. இது 8GB+256GB மற்றும் 12GB+256GB வகைகளை முறையே ரூ.24,999 மற்றும் ரூ.26,999 விலையில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 25 முதல் ரியல்மி இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் மூலம் கேலக்ஸி பர்பில், நெபுலா க்ளோ மற்றும் சாட்டர்ன் பிரவுன் ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Realme P3X 5G மாடலானது 6ஜிபி+128ஜிபி பிரிவானது ரூ.13,999க்கும் மற்றும் 8ஜிபி+128ஜிபி பதிப்பின் விலை ரூ.14,999க்கும் விற்பனைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த மாடல் பிப்ரவரி 28 முதல் லூனார் சில்வர், மிட்நைட் ப்ளூ மற்றும் ஸ்டெல்லர் பிங்க் வண்ணங்களில் Realme இணையதளம் மற்றும் Flipkart இணியதளம் வழியாக கிடைக்கும்.
Also Read: iPhone 17: ஐபோன் 17 மாடல் லீக்கானது: இனி கேமரா வடிவமைப்பே மாறுகிறது..புகைப்படம் இதோ
Realme P3 Pro 5G சிறப்பம்சங்கள்:
OS:
ஆண்ட்ராய்டு 15, Realme UI 6.0
RAM & Storage:
8 GB RAM + 128 GB
8 GB RAM + 256 GB
12 GB RAM + 256 GB
Processor
Qualcomm Snapdragon 7s Gen 3
பின்பக்க கேமரா:
50 MP + 2 MP
முன்பக்க கேமரா:
16 MP
Battery
6000 mAh
Display
6.83 inches (17.35 cm)
Also Read: அசத்தும் பி.எஸ்.என்.எல்: தொடர்ந்து வருவாய் அதிகரிப்பு