31.12.2024 அன்று நிறைவடைந்த 9 மாதங்களில், மொத்த வருவாய் ரூ.15,603 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் (31.12.2023) ரூ.14,433 கோடியாக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 மத்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் நிறுவனமான பி.எஸ்.என்.எல் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செயல் நடவடிக்கை மூலம் வருவாய்:

இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது, 31.12.2024 இல் நிறைவடைந்த காலாண்டில்  வருவாய் ரூ.4,969 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் (31.12.2023) ரூ.4546 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பைக் காணமுடிகிறது.

31.12.2024 அன்று முடிவடைந்த 9 மாதங்கள்: வருவாய் ரூ.14,197 கோடியாகும்.  இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் (31.12.2023) ரூ.12,905 கோடியாக இருந்தது.

2024-25-ம் ஆண்டின் இறுதி காலாண்டில், இதே நிலை தொடரும்.

இதர வருவாய்:

31.12.2024 அன்று முடிவடைந்த 9 மாதங்களுக்கு, மற்ற வருவாய் ரூ.1,406 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் (31.12.2023) இருந்த ரூ.1,528 கோடியை விட சற்று குறைவாகும்.

31.12.2024 அன்று நிறைவடைந்த காலாண்டில், பிற வருவாய் ரூ.706 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் (31.12.2023) ரூ.511 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.

மொத்த வருவாய்:

31.12.2024 அன்று நிறைவடைந்த காலாண்டில் மொத்த வருவாய் ரூ.5,675 கோடியாகும். இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் (31.12.2023) ரூ.5057 கோடியாக இருந்தது.

31.12.2024 அன்று நிறைவடைந்த 9 மாதங்களில், மொத்த வருவாய் ரூ.15,603 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் (31.12.2023) ரூ.14,433 கோடியாக இருந்தது.