ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், ஐபோன் 17 மாடல்கள் குறித்து ஆன்லைனில் தகவல்கள் கசிந்திருக்கின்றன. ஐபோன் 17 மாடலில் இரண்டு பின்புற கேமராக்களுடன் கிடைமட்டமாக அமைக்கப்பட்டுள்ளது, அதே சமயம் ஐபோன் 17 ப்ரோ மாடலானது, ஐபோன் 16 ப்ரோவில் காணப்படும் கேமரா வடிவமைப்பை ஒத்து இருக்கும் என்றும் வதந்திகள் வெளியாகியுள்ளன.
ஐபோன் 17:
ஆப்பிள் நிறுவனம் , தனது புதிய ஐபோன் மாடல் ஐபோன் 17 ஐ இந்த வருடத்திற்குள் விற்பனைக்கு கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஐ-போன் 17 குறித்தான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்ற போதிலும், இதுகுறித்தான தகவல்கள் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் வடிவமைப்பு, கேமரா, செயல்திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 17 வதந்தி
ஐபோன் 17 வடிவமைப்பானது, இது முந்தைய பதிப்போடு ஒப்பிடும்போது, முக்கியமாக கேமரா வடிவமைப்பை மாற்றியுள்ளது. பிரதான கேமராவும், அல்ட்ரா-வைட் கேமராவும் மாற்றப்பட்டுள்ளன. மேலும் சிறிய அல்ட்ரா-வைட் கேமரா டைனமிக் ஐலேண்ட் கூறுகளின் கீழ் மறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஐபோன் 17 குறித்து பரவும் தகவல்கள்:
• குறைந்த தேவை காரணமாக, நிறுவனம் iPhone 17 தொடரிலிருந்து Plus மாடலை நீக்கலாம் என்றும் கூறப்படுகிறது• ஐபோன் 17 ப்ரோ A19 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.• ஐபோன் 17 தொடர் மாடல்கள் iOS 19 ஐ கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது• இந்த போன்களின் சேஸ் மற்றும் பிரேம், மீண்டும் அலுமினியத்தால் செய்யப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.• மெலிதான வடிவத்தை கொண்ட புதிய சாதனத்தை அறிமுகப்படுத்துகிறது.• நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமராக்கள்.
இதுபோன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது, பயனர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஆப்பிள் நிறுவனமானது, அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.