வாட்ஸ் அப் ‘Accounts Center’ உடன் இணைக்கும் வசதி வெளியாகியுள்ளது. இதன்மூலம் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என மூன்றிலும் நேரடியாக ஸ்டேட்டஸைப் பகிர முடியும்.


மெட்டா வாட்ஸ் அப்:


வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில் மெட்டா பல அப்டேட்டை வழங்கி வருகிறது. தொழில்நுப்ட வசதிகளை அவ்வபோது வழங்கி வருகிறது. புதிய அப்டேட்களை உருவாக்கும் பணியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதோடு, ஃபேஸ்புக்கில் உள்ள வசதிகளை முதலில் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்தது. இளைய தலைமுறையினர் அதிக அளவில் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் பல்வேறு அம்சங்களை வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் செயலிகளிலும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது மெட்டா நிறுவனம். 


மெசேஜ், வாய்ஸ் கால், பணி தொடர்பான விசயங்கள், வீடியோ ஷேரிங், புகைப்படம், ஃபைல்கள் ஷேர் செய்வதற்கு மட்டுமல்லாமல் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காகவும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. வீடியோ கால் வசதிகளில் ஃபில்டர்கள், அதிக MB ஃபைல்களை பகிர்வது, வீடியோ காலில் அதிக நபர்கள் இணையலாம் ஆகிய பல அப்டேட்களை மெட்டா வழங்கியது. 


தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் என இவை மூன்றிலும் உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். கூகுளில் தேட வேண்டிய அவசியத்தை குறைத்துள்ளது எனலாம்.




‘Accounts Center’:


ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் தளத்தில் ஸ்டேட்டஸ் பகிந்தால் அதை வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் பகிரும் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Beta வர்சனில் கிடைத்தது. இப்போது ஆண்ட்ராய்ட், ஐ.ஒ.எஸ். பயனர்களுக்கு கிடைக்கிறது. 


இந்த வசதியை எனேபிள் செய்ய  ‘Accounts Center' உங்க அக்கவுண்ட் மெட்டா குறிப்பிட்ட சென்டரில் இணைக்கப்பட வேண்டும். இப்போது வாட்ஸ் அப் அக்கவுண்ட்டையும் அக்கவுண்ட் சென்டருடன் இணைந்துவிட்டால் ஒரே நேரத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் வாட்ஸ் அப்பில் அந்த லிங்க் உடன் தெரியும். இதற்கு நீங்கள் உங்களுடைய இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக் அக்கவுண்டை வாட்ஸ் அப் உடன் இணைக்க வேண்டும். இதற்கு ’WhatsApp Settings > Accounts Center’ என்பதை க்ளிக் செய்து இணையலாம்.


வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இசை / பாடல்கள் உடல் அப்டேட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் ஆக இருக்கிறது.  இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஸ்டோரியில் உள்ள வசதிகள் போல வாட்ஸ் அப்பிலும் புகைப்படத்துடன் விருப்பமான பாடல்களை சேர்த்து ஸ்டேட்டஸில் அப்டேட் செய்யலாம். 





மேலும் வாசிக்க..


Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!


Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து