நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்


ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். பிரியங்கா மோகன் மற்றும் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. Gen Z கிட்ஸ்களின் காதலை மையமாக வைத்து ரொமாண்டிக் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏற்கனவே பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வரதொடங்கிவிட்டன. 


நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்


நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் நாயகன் ஒரு செஃப் ஆக ஆசைப்படுகிறார். அவனைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் சமையல் காரன் என கிண்டலடிக்கிறார்கள். திரைத்துறைக்கு நடிக்க வருவதற்கு முன் நடிகர் தனுஷ் ஒரு செஃப் ஆக ஆசைப்பட்டதாகவும் இதனால் இந்த படத்தில் நாயகனை செஃப் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. நிஜ வாழ்க்கையில் நிறைவேறாத தனது ஆசையை தனுஷ் தான் இயக்கியுள்ள படத்தின் வழி நிறைவேற்றியுள்ளதை பலரும் பாராட்டி வருகிறார்கள்


இட்லி கடை


நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் தவிர்த்து தனுஷ் இயக்கி நடித்துள்ள மற்றொரு படம் இட்லி கடை. நித்யா மேனன் , ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தோடு வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 


தொடர்ந்து தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா , இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மே , அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பையோபிக், மற்றும் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.