Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!

Rohit Sharma: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசி மீண்டும் தனது அதிரடியான ஃபார்முக்கு திரும்பியுள்ளார் ரோகித் சர்மா.

Continues below advertisement

Rohit Sharma: இந்திய கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து அணியும் மோதும் 2வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 305 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

Continues below advertisement

ரோகித் மிரட்டல்:

இந்த நிலையில், இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்காக ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி சிறப்பாக ஆடியது. தொடர்ந்து விமர்சனங்களைச் சந்தித்து வந்த ரோகித் சர்மா கடந்த போட்டியில் 2 ரன்களை எடுத்த நிலையில், இநத போட்டியில் களமிறங்கியது முதலே பட்டாசாய் வெடித்தார். 

பவர் ப்ளேவில் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினர். பழைய ரோகித் சர்மாவாக அவர் பந்துகளை அடித்து ஆடிய விதம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. அவருக்கு மறுமுனையில் சுப்மன் கில் மிகச்சிறப்பாக ஒத்துழைப்பு கொடுக்க ரோகித் சர்மா தனது அதிரடியைத் தொடர்ந்தார். 

ஹிட்மேன் சதம்:

இதனால், அவர் 30 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அரைசதம் கடந்தும் அதிரடி காட்டிய ரோகித் சர்மா சதம் விளாசினார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். ரோகித் சர்மா 76 பந்துகளில் இந்த சதத்தைப் பூர்த்தி செய்தார்.  ரோகித் சர்மா இதில் 9 பவுண்டரி 7 சிக்ஸர் அடித்தார். இது அவரது 32வது சதம் ஆகும். ரோகித் சர்மா கடைசியாக 2023ம் ஆண்டு உலகக்கோப்பையில் சதம் விளாசியிருந்தார். அதன்பின்பு, எந்தவொரு போட்டியிலும் அவர் சதம் விளாசவில்லை. 

தொடர்ந்து விமர்சனங்களைச் சந்தித்து வந்த ரோகித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசி தனது ஃபார்முக்கு திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில வாரங்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில், பலமிகுந்த இங்கிலாந்துக்கு எதிராக ரோகித் சர்மா சதம் விளாசி ஃபார்முக்கு திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

37 வயதான ரோகித் சர்மா இதுவரை  267 ஒருநாள் போட்டிகளில் 259 இன்னிங்சில் பேட்டிங் செய்து 32 சதம் விளாசியுள்ளார். முன்னதாக ரோகித்சர்மாவிற்கு சிறப்பாக ஒத்துழைப்பு தந்த தொடக்க வீரர் சுப்மன் கில் 52 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 60 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  

Continues below advertisement
Sponsored Links by Taboola