Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Rohit Sharma: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி மூலமாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

Rohit Sharma: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி ஒடிசாவின் கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி டக்கெட்டின் அதிரடி, ஜோ ரூட்டின் பொறுப்பான பேட்டிங்கால் 304 ரன்களை குவித்தது.
305 ரன்கள் டார்கெட்:
Just In




இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களின் பேட்டிங் ஃபார்ம் என்பது கடந்த சில மாதங்களாகவே சொதப்பலாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, டி20 உலகக்கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடவில்லை.
கம்பேக் தந்த ரோகித்:
சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கிய கேப்டன் ரோகித் முதல் போட்டியில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், அவரது பேட்டிங் கடும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில், இன்று கட்டாக்கில் நடக்கும் போட்டியில் பழைய ரோகித் சர்மாவாக கம்பேக் கொடுத்துள்ளார்.
ஆட்டம் தொடங்கியது முதலே பவுண்டரி சிக்ஸர் என அடித்து விளாசினார் ரோகித் சர்மா. தனது வழக்கமான பேட்டிங்கிற்கு திரும்பிய ரோகித் சர்மா 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோகித் சர்மாவின் அதிரடியை கண்ட ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
10 போட்டிகளுக்கு பிறகு அரைசதம்:
ரோகித் சர்மா 10 ஒருநாள் போட்டிகளுக்கு பிறகு இன்று மீண்டும் அரைசதம் விளாசியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி நெருங்கும் வேளையில் ரோகித் சர்மா மீண்டும் அரைசதம் விளாசியிருப்பது இந்திய அணிக்கும் நம்பிக்கை அளித்துள்ளது.
கெயிலை முந்தி அசத்தல்:
ரோகித் சர்மா இந்த போட்டியில் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் கெயிலை முந்தி ரோகித் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா தற்போது வரை 335 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இந்த போட்டிக்கு முன்னதாக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 331 சிக்ஸருடன் 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தானின் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
37 வயதான ரோகித் சர்மா இதுவரை 267 போட்டிகளில் ஆடி 10 ஆயிரத்து 922 ரன்களை எடுத்துள்ளார். அதில் 3 இரட்டை சதங்களும், 31 சதங்களும், 58 அரைசதங்களும் அடங்கும்.