இந்தியாவில் ஜியோவின் இரண்டாவது லேப்டாப் மாடலாக நேற்று (ஜூலை 31, திங்கள்) ஜியோபுக் (2023) அறிமுகப்படுத்தப்பட்டது. 


ஜியோபுக் (2023)


இந்த புதிய லேப்டாப் பிளாஸ்டிக் பாடி, ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி 8788 பிராசாசர், இன்பில்ட் Jio சிம், டூயல்-பேண்ட் வைஃபை உட்பட பட்ஜெட் லேப்டாப் ஸ்போர்ட்ஸ் இணைப்பு ஆப்ஷன் மற்றும் HDMI மினி போர்ட் என பல அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதில் 5,000mAh பேட்டரியும் வருகிறது. இதனால் இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை பயன்படுத்தும் வகையில் உருவாகி உள்ளது.



ஜியோபுக் (2023) விலை


இந்தியாவில் ஜியோபுக் (2023) விலை ரூ. 16,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரே வண்ணமாக ஜியோ ப்ளூ என்ற வண்ணத்தில் வருகிறது. அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டலின் இ-காமர்ஸ் வலைத்தளம் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகள் மூலம் இதனை வாங்க முன்கூட்டிய ஆர்டர் செய்து கொள்ளலாம். இது ஆகஸ்ட் 5 முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Tomato Ration Shop: மக்களே சூப்பர் நியூஸ்.. இன்று முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.. உடனே போய் தக்காளி வாங்குங்க..


ஜியோபுக் (2023) ஸ்பெசிஃபிகேஷன் 


ஜியோபுக் (2023) ஆனது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஜியோஓஎஸ் இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் 11.6 இன்ச் HD (768X1,366 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த 4ஜி லேப்டாப் பிளாஸ்டிக் பாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் அதோடு உள்ளேயே இன்பில்டாக Jio சிம் இணைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வெளிவந்த JioBook, Adreno 610 GPU, 2GB RAM மற்றும் 32GB eMMC சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்ட Qualcomm Snapdragon 665 SoC udan வந்திருந்தது.



ஸ்டோரேஜ் மற்றும் பிற வசதிகள்


இது 4GB LPDDR4 ரேம் மற்றும் 64GB உள்ளடங்கிய ஸ்டோரேஜ் வசதியுடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் மீடியாடெக் MT8788 பிராசசரில் இயங்குகிறது. இதன் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256ஜிபி வரை அதிகரிக்கவும் முடியும். JioBook (2023) இல் Wi-Fi, Bluetooth 5, HDMI மினி போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட போர்ட்-கள் உள்ளன. இது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது மற்றும் 2 மெகாபிக்சல் வெப் கேமராவையும் கொண்டுள்ளது. 5,000mAh கொண்ட பேட்டரி என்பதால் இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் எட்டு மணிநேரம் வரை பேக்கப் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த லேப்டாப் எடை மிகவும் குறைவாக வந்துள்ளது, வெறும் 990 கிராம் மட்டுமே எடை கொண்ட இது முந்தைய மாடலை விட மிகவும் குறைவு. அது 1.2 கிலோகிராம் எடையுடன் வந்தது குறிபபிடத்தக்கது.