நீங்கள் பயணத்தின்போது, வெளியில் இருக்கும்போது கேம் விளையாடி மகிழ்ந்தால், மற்றவர்கள் பார்வைக்கு ஸ்டைலான தோற்றமளிக்கும் கேமிங் லேப்டாப் வாங்கலாம். பவர் சோர்ஸில் இணைக்காமல் இருக்கும்போதும் கூட, கேமிங் லேப்டாப் கேமிங் அனுபவத்தைத் தக்கவைக்கும். இந்தியாவில் உள்ள சிறந்த கேமிங் மடிக்கணினிகள், வழக்கமான மடிக்கணினிகளுடன் ஒப்பிடும்போது சிறந்த கூலிங் மற்றும் வலுவான தொழில்நுட்பத்தை வழங்குகின்றன, இதனால் வேகமான செயல்திறனும், எவ்வளவு பயன்படுத்தினாலும் சூடாகாத தன்மையும் கிடைக்கிறது, அதுவே இந்த கேமிங் லேப்டாப்களின் ஸ்பெஷல்.

சிறந்ததை வாங்க வேண்டும்

ஆனால் இதில் எது சிறந்தது என்று தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கும், குறிப்பாக காட்சி தரம், CPU, கிராபிக்ஸ் கார்டு, ரேம் மற்றும் ஹீட் செயல்திறன் போன்ற பல காரணிகளை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு தான் லேப்டாப்களை வாங்க வேண்டும். அவற்றை ஆராய்ந்து, இந்தியாவில் 80,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5 கேமிங் லேப்டாப்களை தேர்ந்தெடுத்துள்ளோம். இதில் உங்கள் தேவை என்ன என்பதை படித்து அறிந்துகொள்ளவும்.

 

பிராண்ட்

ரேட்டிங்

விலை

லெனோவா ஐடியாபேட் கேமிங் 3 15ACH6 லேப்டாப்

4.2/5

Rs. 56,990.00

MSI GF63 தின் (மெல்லிய) கேமிங் லேப்டாப்

4.1/5

Rs. 63,500.00

ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப்

4.3/5

Rs. 73.758.00

டெல் நியூ G15-5515 கேமிங் லேப்டாப்

3.9/5

Rs. 74,700.00

ASUS ROG Strix G15 கேமிங் லேப்டாப்

4.7/5

Rs. 76,990.00

 

லெனோவா ஐடியாபேட் கேமிங் 3 15ACH6 லேப்டாப்

" target="_blank">

இந்த லேப்டாப்-இன் அற்புதமான சரவுண்ட்-சவுண்ட் தரம் மற்றும் அற்புதமான கிராபிக்ஸ் காரணமாக இந்தியாவில் உள்ள சிறந்த கேமிங் லேப்டாப்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இந்த உறுதியான கேமிங் லேப்டாப் அதன் மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் கார்டு காரணமாக விளையாடுவபவர்களுக்கும் மற்றும் கிரியேட்டர்களுக்கும் உச்சகட்ட செயல்திறனை வழங்குகிறது. பட்ஜெட்டுக்குள் தங்கள் கேமிங் அனுபவத்தை உயர்த்த விரும்புபவர்கள் அவசியம் வாங்க வேண்டியது இலகுரக கேமிங் லேப்டாப்தான். கேமிங்கிற்கான இந்த லேப்டாப்பின் அதி பயங்கர வேகத்தை, நல்ல பேட்டரி ஆயுளுடன் கொடுக்கிறது. இது அதன் விலை மதிப்பில் ஒரு கேட்ச் செய்கிறது. இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய இந்த லேப்டாப்பின் விலை தான் அனைவரையும் ஈர்க்கிறது. 

  • மாடல் பெயர்: ஐடியாபேட் கேமிங் 3 15ACH6
  • திரை அளவு: 15.6 அங்குலம்
  • நிறம்: ஷேடோ பிளாக்
  • கெப்பாசிட்டி: 8 ஜிபி ரேம் + 256 ஜிபி எஸ்எஸ்டி
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம்: விண்டோஸ் 11 ஹோம்
  • கிராபிக்ஸ் கோ-ப்ராசசர்: என்விடியா ஜியிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1650 4ஜிபி ஜிடிடிஆர்6

லெனோவா ஐடியாபேட் கேமிங் லேப்டாப்பை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

 

MSI GF63 தின் (மெல்லிய) கேமிங் லேப்டாப்

" target="_blank">

MSI வழங்கும் ரியலிஸ்டிக் கேமிங் அனுபவத்துடன் சிறந்த செயல்திறனோடு விளையாடி ஒவ்வொரு கேமிலும் பிரகாசிக்க எல்லா கேமரும் விரும்புவார்கள். MSI GF63 Thin என்பது ஒரு நேர்த்தியான இலகுரக கேமிங் லேப்டாப் ஆகும், இது 4-பக்க மெல்லிய பெசல் (bezel) டிஸ்பிளே மற்றும் அதிநவீன பிரஷ்டு அலுமினியம் சேஸ்ஸுடன் சக்திவாய்ந்த செயல்திறனை வழங்குகிறது. இந்த ஸ்டைலான கேமிங் லேப்டாப் MSI App Player உடன் வருகிறது, இது மொபைல் மற்றும் PC கேமிங்கை இணைத்து தடையற்ற அனுபவத்தை உருவாக்குகிறது. இந்த கேமிங் லேப்டாப்பின் துடிப்பான காட்சி அனுபவத்தை ஒவ்வொரு கேமரும் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • மாடல் பெயர்: GF63 Thin 10SC-848IN
  • திரை அளவு: 15.6 அங்குலம்
  • நிறம்: கருப்பு
  • கெப்பாசிட்டி: 8 ஜிபி ரேம் + 512 ஜிபி எஸ்எஸ்டி
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம்: விண்டோஸ் 11 ஹோம்
  • கிராபிக்ஸ் கோ-ப்ராசசர்: என்விடியா ஜியிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1650 ஜிடிடிஆர்6

MSI GF63 மெல்லிய கேமிங் லேப்டாப்பை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.



ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப்

" target="_blank">

மெல்லிய மற்றும் சக்திவாய்ந்த ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப் ஒரு அதிநவீன கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. கேமிங் அல்லது ஒரே நேரத்தில் பல பணிகள் செய்யும்போது உயர்தர கிராபிக்ஸ் மற்றும் செயலாக்க சக்தியை இதில் அனுபவிக்க முடியும். மேலும், இந்த கேமிங் லேப்டாப் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை தொடர்ந்து கொடுப்படதற்கு, மேம்படுத்தப்பட்ட குளிர்ச்சியை டிவைசிற்கு வழங்குகிறது. ஒரு நேர்த்தியான மைக்ரோ-எட்ஜ் பெசல் (bezel) டிஸ்ப்ளே அதிகபட்ச காட்சி அனுபவத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் B&O மூலம் ஆடியோவுடன் கூடிய முன்-பயரிங் ஸ்பீக்கர்கள் சக்திவாய்ந்த, கஸ்டம்-ட்யூன்ட் ஒலியை வழங்குகின்றன.

  • மாடல் பெயர்: 15-ec2146AX
  • திரை அளவு: 15.6 அங்குலம்
  • நிறம்: ஷேடோ பிளாக் மற்றும் அல்ட்ரா வயலட்
  • கெப்பாசிட்டி: 16 ஜிபி ரேம் + 512 ஜிபி எஸ்எஸ்டி
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம்: விண்டோஸ் 11 ஹோம்
  • கிராபிக்ஸ் கோ-ப்ராசசர்: என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050 ஜிடிடிஆர்6

ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப்பை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

 

டெல் நியூ G15-5515 கேமிங் லேப்டாப்

" target="_blank">

இந்தியாவில் 80000க்கு கீழ் உள்ள சிறந்த கேமிங் மடிக்கணினிகளில் ஒன்றாக இருப்பதால், டெல் வழங்கும் இந்த சலுகை விலை அனைவரையும் கவர்ந்துள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வெப்ப வடிவமைப்பின் (ஹீட்டிங் சிஸ்டத்தின்) சமீபத்திய முன்னேற்றங்கள், மாறிவரும் சிஸ்டம் சுமைக்கு ஏற்றவாறு போதுமான சக்தியை வழங்குகின்றன. வலுவான AMD செயலிகள் மூலம், கேமிங், ஸ்ட்ரீமிங் அல்லது வீடியோக்களை இடையூறு இல்லாமல் தரும் இந்த கூல் கேமிங் லேப்டாப்பின் சக்திவாய்ந்த செயல்திறனை கண்டுகளிக்கலாம். இது பிரீமியம் கேமிங் லேப்டாப், ஸ்டைல் ​​மற்றும் செயல்பாட்டின் சரியான கலவையை உங்களுக்கு வழங்குகிறது.

  • மாடல் பெயர்: G15-5515
  • திரை அளவு: 15.6 அங்குலம்
  • நிறம்: புள்ளிகளுடன் கூடிய பாண்டம் கிரே
  • கெப்பாசிட்டி: 16 ஜிபி ரேம் + 512 ஜிபி எஸ்எஸ்டி
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம்: விண்டோஸ் 11 ஹோம்
  • கிராபிக்ஸ் கோ-ப்ராசசர்: என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050 ஜிடிடிஆர்6

Dell New G15-5515 கேமிங் லேப்டாப்பை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

 

ASUS ROG Strix G15 கேமிங் லேப்டாப்

" target="_blank">

ROG Strix G15 கேமிங் லேப்டாப், ஸ்ட்ரீமிங் மற்றும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் சிறந்த கேமிங் லேப்டாப்களில் ஒன்றாக இருப்பதால், இந்த கூல் லேப்டாப் கேமிங்கிற்கு உகந்ததாக உள்ளது. அதன் அலுமினியம் மூடியிலிருந்து அதன் கடினமான தளம் வரை, இந்த ஸ்டைலான கேமிங் லேப்டாப், தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு உகந்ததாக நீடித்து நிலைத்திருக்கும். இந்த கவர்ச்சிகரமான கேமிங் லேப்டாப் அதன் உயர் கூலிங் ரேட் மற்றும் குறைந்த ஃப்ரேம் லேக் ரேட் மூலம் அசாத்தியமான வேகத்தில் கேமிங்கை செயல்படுத்துகிறது. தொழில்முறை கேமர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய கேமிங் லேப்டாப் இது.

  • மாடல் பெயர்: G15-5515
  • திரை அளவு: 39.62 சென்டிமீட்டர்கள்
  • நிறம்: எக்லிப்ஸ் கிரே
  • கெப்பாசிட்டி: 8 ஜிபி ரேம் + 512 ஜிபி எஸ்எஸ்டி
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம்: விண்டோஸ் 11 ஹோம்
  • கிராபிக்ஸ் கோ-ப்ராசசர்: என்விடியா ஜியிபோர்ஸ் RTX 3050 Ti GDDR6

ASUS ROG Strix G15 கேமிங் லேப்டாப்பை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவில் 80,000க்கு கீழ் உள்ள சிறந்த கேமிங் மடிக்கணினிகள் யாவை?

ASUS, HP, MSI, Dell மற்றும் Lenovo போன்ற பிராண்டுகள் இந்தியாவில் 80000க்கு கீழ் சிறந்த கேமிங் லேப்டாப்களை வழங்குகின்றன. கேமிங்கிற்கான இந்த மடிக்கணினிகளின் விவரக்குறிப்புகளைப் புரிந்து கொள்ள மேலே படித்து தெரிந்துகொள்ளவும்.

பிரீமியம் கேமிங் லேப்டாப் வழக்கமான லேப்டாப்பில் இருந்து எப்படி வேறுபடுகிறது?

வழக்கமான மடிக்கணினிகளை விட கவர்ச்சிகரமான கேமிங் மடிக்கணினிகள் அதிக சக்தி வாய்ந்தவை மற்றும் அதிக ரேம் கொண்டவை. இந்தியாவில் சிறந்த கேமிங் மடிக்கணினிகள் பயனர்களுக்கு பேக்லிட் கீபோர்டுகள், தெளிவான காட்சிகள் மற்றும் நீண்ட கேமிங் அமர்வுகளுக்கு நீண்ட பேட்டரி ஆயுள் போன்ற பல அம்சங்களையும் வழங்குகின்றன. மேலும் நீண்ட நேரம் பயன்படுத்தும்போது டிவைஸ் சூடாகாமல் இருப்பதற்கேற்ற கூலிங் சிஸ்டம் இவற்றில்தான் கிடைக்கிறது.

சிறந்த கேமிங் மடிக்கணினிகளை எவ்வாறு தேர்வு செய்வது?

கூல் கேமிங் மடிக்கணினிகளில் அதிக ரேம் திறன் பெரும்பாலும் விரும்பத்தக்கது. கேமிங்கிற்காக மடிக்கணினியை வாங்க வேண்டும் என்றால், 8ஜிபி ரேம் அல்லது அதற்கு மேற்பட்ட லேப்டாப்பைப் வாங்க வேண்டும். வழக்கமாக, 8ஜிபி ரேம் போதுமானதாக இருக்கும், அதே சமயம் உயர் செயல்திறன் கொண்ட கேமிங் லேப்டாப்பைப் என்றால் 16ஜிபி பரிந்துரைக்கப்படுகிறது.