தமிழ்நாட்டில் ஏற்கனவே 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் கூடுதலாக 200 ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி மொத்த வியாரிகள் விற்பனைக்காக காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் இருந்து பல ரக காய்கறிகள்  வரும். கோயம்பேடு சந்தையிலிருந்து சிறு மொத்த வியாபாரிகள் தேவையாக காய்கறிகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் சில்லறை வியாபாரத்தில் காய்கறிகளின் விலை 20 முதல் 30 ரூபாய் வரை அதிகமாக தான் விற்பனை செய்யப்படும்.


கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி தக்காளி வரத்து என்பது 1000 முதல் 1100 டன் வரை இருக்கும். ஆனால் தற்போது வரத்து குறைவாக இருக்கும் நிலையில் தினசரி 400 முதல் 500 டன் வரை மட்டுமே வரத்து உள்ளது என வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சென்னையில் இருக்கும் சில்லரை வியாபார கடைகளில் 200 முதல் 220 ரூபாய் வரை தக்காளி விறபனை செய்யப்படுகிறது. மக்களின் அவதியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தரப்பில் நியாய விலை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 200 கடைகளில் மொத்தம் 500 கடைகளில் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக பேசிய அவர், “பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் முதலமைச்சரின் உத்தரவுபடி தமிழக முழுவதும் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில்  தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படும். மாவட்டம் தோறும் 10 நியாய விலைக் கடைகள் என சராசரியாக ஒரு கடைகளில் 50 கிலோ தக்காளி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் துறை, உணவு துறை அதிகாரிகளுடன் விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்” என தெரிவித்தார்.


தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் தக்காளி மட்டுமல்லாமல் பிற காய்கறி விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய காய்கறி குறிப்பாக தக்காளி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகரித்து வரத்து அதிகமானால் இந்த நிலை மாறும் என வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilnadu Encounter: சென்னை அடுத்த தாம்பரத்தில் எண்கவுண்டர்.. 2 ரவுடிகளை சுட்டுக்கொன்ற போலீசார்


Cylinder Price: காலையிலேயே நல்ல சேதி..! வணிக சிலிண்டரின் விலை குறைப்பு, எவ்வளவு தெரியுமா?