உலகம் முழுவதும் பலர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இந்தத் தளத்தில் பலரும் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் ஆகியவற்றை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் இதில் பலரும் தங்களுடைய வீடியோ பதிவுகளையும் செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் அதிகமான நபர்கள் இத்தளத்தை பயன்படுத்துவதால் இதில் சிலருடைய கணக்கு ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் நிறையே உள்ளன.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் கணக்கு எளிதாக ஹேக் செய்ய இருக்கும் வழியை கண்டறிந்த இளைஞருக்கு 38 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த நீரஜ் சர்மா என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமிற்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். அதில் அவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைப்பாட்டை கண்டறிந்துள்ளார்.
அதன்படி, இன்ஸ்டாகிராம் தளத்தில் ரீல்ஸ் உள்ள தம்ப்நெயிலை மீடியா ஐடியை மட்டும் வைத்து எளிதாக மாற்ற முடியும் என்று கருதப்படுகிறது. இது எந்த பயனாளரின் கணக்கில் இருந்தும் செய்யமுடியும் என்பதை நீரஜ் சர்மா கண்டறிந்துள்ளார். இதுகுறித்து, “கடந்த டிசம்பர் மாதம் என்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் இருக்கும் குறைபாடு தொடர்பாக தேடி வந்தேன். ஜனவரி மாதம் 31ஆம் தேதி இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு குறைபாடை அறிந்தேன்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் தளத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதன்பின்னர் மூன்று நாட்களுக்கு பிறகு இது தொடர்பான டெமோவை என்னை அனுப்புமாறு இன்ஸ்டாகிராம் நிறுவனம் கேட்டு கொண்டது. இதைத் தொடர்ந்து அதை நான் 5 நிமிட வீடியோவாக எடுத்து அனுப்பினேன். அதன்பின்னர் கடந்த மே மாதம் நான் அனுப்பிய குறைப்பாடை இன்ஸ்டாகிராம் நிறுவனம் ஒப்புக் கொண்டது. அத்துடன் எனக்கு பரிசாக 45000 டாலர் (35 லட்சம் ரூபாய்)தருவதாக கூறியது. அத்துடன் இந்த பரிசு வழங்க 3 மாதங்கள் தாமதம் அடைந்ததன் காரணமாக அதற்கும் சேர்த்து 4500 (3 லட்சம் ரூபாய்)டாலர் தருவதாக தெரிவித்தது” எனக் கூறினார்.
மொத்தமாக இவர் கண்டறிந்த பாதுகாப்பு குறைப்பாட்டிற்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் 35 லட்சம் ரூபாய் பரிசை வழங்கியது. அத்துடன் அவருக்கு பரிசு அளிக்க தாமதம் அடைந்ததற்காக 3 லட்சம் சேர்த்து வழங்கியது. இந்த இளைஞருக்கு மொத்தமாக 38 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: இந்தியாவில் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் 5G; உங்கள் மொபைல் 5G மொபைலா என தெரிந்து கொள்வது எப்படி?