இந்தியாவில் அடுத்த மாதம் தீபாவளியையொட்டி ஜியோவின் 5G சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் மொபைல் 5ஜி மொபைலா என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
5ஜி:
மத்திய அரசு சார்பில் 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்று 5ஜி ஏலம் எடுத்திருந்தன. தொலைத்தொடர்பு துறையின் பரிணாம வளர்ச்சி அடிப்படையில் அறிமுகம் ஆகவுள்ள இந்த 5ஜி, மிக அதிவேகமான இண்டர்நெட் வசதி மற்றும் துல்லியமான வாய்ஸ் காலிங் உள்ளிட்ட சேவைகளை வழங்க உள்ளது.
சமீபத்தில் ஜியோ நிறுவனம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசிய நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தீபாவளி முதல் சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் ஜியோவின் 5G சேவையை அறிமுகம் செய்யவுள்ளது எனவும் வரும் 2023ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5G சேவை வெற்றிகரமாக நிறுவப்படும் என தெரிவித்தார்.
மேலும், மொபைல் நெட்வொர்க்கில் ஜியோ 5G சேவை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே 5G சேவையின் அனுபவத்தை மக்கள் உணர்ந்து பயன்பெற, ஜியோ எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் மெட்ரோ நகரமான மும்பையில் திறக்கப்படவுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் உங்கள் மொபைலில் 5G சேவையை பெற முடியுமா என தெரிந்து கொள்வோம்.
1. உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் settings என்பதை கிளிக் செய்யவும்
2. WIFI & MOBILE NETWORKS என்பதை கிளிக் செய்யவும்
3. SIM & NETWORK என்பதை கிளிக் செய்யவும்
4.Preferred Network Type
5.இப்போது, உங்கள் மொபைல் அனுமதிக்கப்பட்டிருந்தால் 2G /3G /4G /5G என தோன்றும்.
ஏலம் ஒதுக்கீடு
பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க்குகள் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய சேவை நிறுவனங்களிடம் இருந்து சுமார் 17,876 கோடி ரூபாயை தொலைதொடர்புத்துறை பெற்றுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலமான 5ஜி, ரூபாய் 1.5 லட்சம் கோடி மதிப்பிலான ஏலங்களைப் பெற்றது, முகேஷ் அம்பானியின் ஜியோ ரூபாய். 87,946.93 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்ட அனைத்து ஏர்வேவ்களில் கிட்டத்தட்ட பாதியை வாங்கியது.
முதன்முறையாக, தொலைத்தொடர்புத் துறை (DoT) 5ஜி அலைகளை ஏலம் எடுத்தவர்கள் முன்பணம் செலுத்திய அதே நாளில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக் கடிதங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கடிதங்களை அதிகாரபூர்வமாக வழங்கியதை தொடர்ந்து, 5ஜி அறிமுகத்திற்கு தயாராகுமாறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களை அமைச்சர் வைஷ்ணவ் முன்பு கேட்டுக் கொண்டார். இந்நிலையில் அடுத்த மாதத்திற்குள் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் 5ஜி சேவையை கொண்டு வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.