கேரள மாநிலத்தில் மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையாக கருதப்படுவது ஒணம் திருவிழா. இந்த பண்டிகை கடந்த 8 தேதி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஓணம் திருவிழாவை ஒட்டி தருமபுரி கேரள சமாஜம் சார்பில் இருபதாவது ஆண்டு ஒணம் திருவிழா தருமபுரியில் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவை ஒட்டி மலையாள மொழி பேசும் பெண்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து பல்வேறு மலர்களால் ஆன அத்தப்பூ கோலம் போட்டனர். இந்த வண்ண கோலம், பண்டிகைக்கு வந்தவர்கள் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இந்த திருவிழாவில் முக்கிய அம்சமாக, மகாபலி சக்கரவர்த்தியாக வேடமிட்ட ஒருவர் வலம் வந்து அனைவருக்கும் நல்லாசி வழங்கினார்.
அதனையடுத்து சமாஜ பெண்கள் அணி சார்பாக கேரளாவின் பாரம்பரிய நடனமான கைகொட்டிகளி, குழந்தைகளின் பரத நாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் 27 வகை பதார்த்தங்கள் அடங்கிய ஓணம் சத்யா வழங்கப்பட்டது. இவ்விழாவில் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் தொழிலதிபர் டிஎன்வி செல்வராஜ், சேலம் மண்டல அனைத்து வணிகர் சங்க தலைவர் வைத்தியலிங்கம் ஆகியோர் சிறப்பழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கேரள சமாஜத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி அடுத்த அதியமான் கோட்டையில் உள்ள தட்ஷணகாசி காலபைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி ஏராளமான பக்தர்கள் பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.
காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு என தனிக்கோயில் தருமபுரி அடுத்த அதியமான்கோட்டையில் தட்ஷ்ண காசி காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. மேலும் காசிக்கு செல்ல முடியாதவர்கள் அதியமான்கோட்டையில் உள்ள பைரவர் கோயிலில் வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். இதனால் தேய்ப்பிறை நாட்களில் இந்த கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மன்னன் அதியமான் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோயில் என்பதால் தமிழகம் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி நாட்களில் வந்து தங்களது நேர்த்தி கடன் நிறைவேற வேண்டும் என காலபைரவருக்கு வெள்ளை பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதே போல் பரிகார தலமான இக்கோயிலில் பைரவருக்கு தோஷங்கள் நீங்க வில்வமாலையும், திருமணம் தடை நீங்க மஞ்சள் மாலையும், கோர்ட்டு வழக்குகளிலிருந்து விடுபெறவும் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தேங்காய் மாலையும், மாணவர்கள் நன்கு படிக்க கொண்டை கடலையில் மலையும், குழந்தை பாக்கியம் கிட்ட முந்திரி மாலையும், அணிவித்தும் பில்லி,சூனியம் விலக மிளகாய் யாகங்களும் செய்யப்படும்,மேலும் கோயிலை 18 முறை வலம் வந்து பைரவரை வணங்கினால் சகல தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.
அதன் அடிப்படையில் இன்று தேய்பிரை அஷடமி என்பதால் காலை முதல் பைரவருக்கு பல்வேறு யாகங்களும், 64 வகையான அபிகங்களும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பைரவர் ருத்ராட்சை பந்தலில் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த பைரவருக்கு இலட்சார்ச்சனைகள் நடைபெற்றது. இந்த தேய்பிறை அஷ்டமி பூஜையில் கலந்துகொள்ள தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோயிலை 18 முறை வலம் வந்து தீபம் ஏற்றி நீண்ட வரிசையில் நின்று பைரவரின் அருளைப்பெற்று சென்றனர்.