இன்ஸ்டாகிராம் பயனர்கள் அதில் அதிக நேரம் செலவிடுவதை கட்டுப்படுத்தவும் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுடன் எல்லைகளை அமைக்கவும் 'Quiet Mode' என்ற புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
புதிய க்வையட் மோட்
பதின்ம வயதினருக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த புதிய அம்சம், பயனர்கள் அனைத்து அறிவிப்புகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உதவும் இந்த அம்சம், அவர்களின் சுயவிவரத்தின் செயல்பாட்டு நிலையை 'க்வைட் மோட்' மாற்றவும் உதவும். இந்த மோடில் இருக்கும்போது, யாராவது ஒருவர் அவருக்கு நேரடியாக செய்தி அனுப்ப முயற்சித்தால், "க்வைட் மோட்" செயலில் உள்ளது என்பதை அனுப்புநருக்குத் தெரிவிக்கும் வகையில் Instagram தானாகவே ஒரு பதிலை அனுப்பும்.
எந்தெந்த நாடுகளில் கிடைக்கும்?
அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பயனர்களுக்கு இந்த புதிய அம்சம் தற்போது கிடைக்கும், எதிர்காலத்தில் மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் ஆன்லைன் அனுபவம், அவர்கள் அங்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் மற்றும் அவர்கள் பார்க்கும் கண்டெண்ட் வகைகள் ஆகியவற்றின் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்க Instagram இன் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எதற்காக இந்த அம்சம்?
Instagram இன் புதிய "க்வைட் மோட்" அம்சம் பயனர்கள் தங்கள் நேரத்தை நிர்வகிக்கவும் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுடன் எல்லைகளை அமைக்கவும் உதவும் ஒரு நேர்மறையான முறையாகும். பதின்ம வயதினரை இலக்காகக் கொண்ட இந்த அம்சம், பயனர்கள் அனைத்து அறிவிப்புகளையும் இடைநிறுத்தவும், அவர்களின் சுயவிவரத்தின் செயல்பாட்டு நிலையை "க்வைட் மோட்" -க்கு மாற்றவும் அனுமதிக்கிறது. இதன் மூலம் படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த உதவுகிறது, மேலும், சமூக ஊடகங்களில் இருந்து சிறிய ஓய்வு எடுத்துக் கொண்டாலும் இதனை பயன்படுத்தலாம். இதன் மூலம் பயனர்கள் சிறப்பாக மற்றவற்றின் மீது கவனம் செலுத்தவும் கவனச்சிதறல்களைக் குறைக்கவும் உதவும்.
'க்வைட் மோட்' ற்கு செல்வது எப்படி?
உங்கள் இன்ஸ்டாகிராம் ஆப்பில் செட்டிங்ஸ் தளத்திற்கு சென்று 'க்வைட் மோட்' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலம் அதனை செயல்படுத்தலாம்.
அதனை இயக்கும்போது என்ன நடக்கும்?
நீங்கள் "க்வைட் மோட்" -ஐ இயக்கும் போது அனைத்து நோட்டிஃபிக்கேஷன்களும் இடைநிறுத்தப்படும், மேலும் உங்கள் சுயவிவரத்தின் செயல்பாட்டு நிலை "க்வைட் மோட்" என்று மாறும். இந்த நேரத்தில், யாராவது உங்களுக்கு நேரடி செய்தியை அனுப்ப முயற்சித்தால், "க்வைட் மோட்" இயக்கத்தில் இருப்பதாக அவர்களுக்குத் தெரிவிக்க Instagram தானாகவே அவர்களுக்குப் பதிலளிக்கும்.