பேனா நினைவுச் சின்னத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் விரிவான அறிக்கையை  தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.






பேனா நினைவுச் சின்னத்திற்கு தடை விதிக்கக்கோரி ராம்குமார் ஆதித்யன் என்பவர் தொடுத்த மனு மீது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று விசாரணை நடத்தியது.


”பேனா நினைவுச் சின்னக் கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும். பேனா நினைவுச்சின்னத்திற்காக CRZ விண்ணப்பத்தை பரிசீலிக்க ஒன்றிய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும். மெரினாவிலும், கொட்டிவாக்கம் - கோவளம் கடற்கரையிலும் யாருக்கும் சமாதி அமைக்கக் கூடாது என தடை விதிக்க வேண்டும்” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  


அரசு வழக்கறிஞர்:  இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.


மேலும் விசாரணையின் போது நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா பத்திரிகைகளில் நான் படித்தது உண்மை என்றால் அது கருத்துக்கேட்புக் கூட்டமே இல்லை. எல்லா தரப்பினரையும் அழைத்து நடத்தப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.  மேலும் இத்திட்டம் குறித்து விரிவான அறிக்கையை  தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டு இந்த வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பட்டது.


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில், 42மீ உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் வகையில், அவரின் நினைவிடத்திற்கு அருகே, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பேனாவை, ரூபாய் 81 கோடி செலவில், 42 மீட்டர் உயரத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


அனுமதி:


சமீபத்தில் பேனா சின்னம் அமைப்பதற்கு, தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம், அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மத்திய அரசு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 


கருத்து கேட்பு கூட்டம்:


மேலும் மீனவர்கள் உட்பட பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவுச் சின்னத்தை பார்வையிடக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு, உரிய பாதுகாப்பு வசதிகள் குறித்தும், சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா? என்பதும் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.