திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 29ம் தேதி பெரிய நாயகியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன்‌ தொடங்கியது. முருக கடவுளின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருகை தருவார்கள்.


Gold Rate Hike: பட்ஜெட் எதிரொலி.. வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம்..! சாமானியர்கள் வேதனை..!


தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகிறது.16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுகு 27ம் தேதி நடைபெற்ற நிலையில் குறைந்த அளவிலான பக்தர்களையே கோவில் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இதனால் தைப்பூசத்திருவிழாவில் நான்காம் நாளான இன்று முருகனை தரிசனம் செய்ய தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கங்கலத்தில் இருந்து வந்த  பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.


Hosur Protest: சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் கற்களை வீசி போராட்டம் - நடந்தது என்ன?


HDFC Life Sanchay Plus: பொருளாதார நெருக்கடி சூழலை சமாளிக்க உதவும் எச்.டி.எஃப்.சி லைஃப் சஞ்சய் ப்ளஸ் திட்டம்


முன்னதாக பாதயாத்திரை வந்த பக்தர்கள் பழனி  சண்முக நதியில் புனித நீராடி பின்பு உடல் முழுவதும் அலகு குத்தியபடி பிரம்மாண்டமான பறவை காவடி எடுத்து வந்தனர். ஒரு பறவைகாவடியில் 10 பக்தர்கள் உடல்முழுவதும்‌ அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அவர்களுடன்‌ பெண் பக்தர்கள் 10அடி நீளமுள்ள அலகு குத்தி நடந்து வந்தனர். ராட்சத க்ரேன்களில் உடல் முழுவதும் அழகு குத்தி பறவைக் காவடிகள் வந்தவர்களைக் கண்டு பொதுமக்கள் மெய்சிலிர்த்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண