இன்பினிக்ஸ் ஸ்மார்ட் போன் நிறுவனம் தனது அதிரடியான இரண்டு மடல்களை இன்று இந்திய சந்தையில் வெளியிடவுள்ளது. ஹாங்காங் நாட்டை தலைநகராக கொண்டு கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் Infinix நிறுவனம் தனது Infinix Note 10 மற்றும் Note 10 Pro ஆகிய இரண்டு அதிரடி ஸ்மார்ட் போன்களை இன்று வெளியிடுகிறது. கடந்த மே மாத தொடக்கத்தில் இந்த போன் குறித்த தகவலை infinix நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 6.95 இன்ச் என்ற அளவிற்கு டிஸ்பிலே கொண்ட ஸ்மார்ட் போனாக இந்த infinix அறிமுகமாகவுள்ளது.
Infinix Note 10
இன்பினிக்ஸ் நோட் 10 என்ற இந்த மாடல் அந்த நிறுவனத்தால் கடந்த மே 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று வெளியாகும் இந்த மாடலில் டூயல் சிம் பொருத்தும் வசதி உள்ளது (நானோ). ஐ.பி.எஸ் எல்.சி.டி கொண்ட 6.95இன்ச் டிஸ்பிலே பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் Android 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு மீடியாடேக் ஹீலியோ ஜி85 சிப்செட்டுடன் செயல்படுகின்றது. 4 ஜிபி RAM 64 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று மடல்களில் வெளியாகவுள்ளது. 48 எம்.பி மெயின் கேமரா மற்றும் இரண்டு கேமெராக்களுடன் 16எம்.பி செல்ஃபீ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Nigeria Twitter Ban :ட்விட்டரை முடக்கிய நைஜீரியா – சைக்கில் கேப்பில் நுழைந்த இந்தியாவின் ‘கூ’
Infinix Note 10 Pro
இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ என்ற இந்த மாடலும் Infinix நிறுவனத்தால் கடந்த மே 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட் போனும் இன்று வெளியாகும், இந்த மாடலில் டூயல் சிம் பொருத்தும் வசதி உள்ளது (நானோ). ஐ.பி.எஸ் எல்.சி.டி கொண்ட 6.95இன்ச் டிஸ்பிலே பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் Android 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு மீடியாடேக் ஹீலியோ ஜி95 சிப்செட்டுடன் செயல்படுகின்றது. நோட் 10 மாடலை விட அதிக திறன்கொண்ட சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 6 ஜிபி RAM 64 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று மடல்களில் வெளியாகவுள்ளது. 64 எம்.பி மெயின் கேமரா மற்றும் மூன்று கேமெராக்களுடன் 16எம்.பி செல்ஃபீ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் விலையும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொரோனா காலகட்டத்தில் பல ஸ்மார்ட் போன்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது, ரெட்மி நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் Infinix நிறுவனத்தின் நோட் 10 மாற்றம் நோட் 10 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களும் இன்று மதியம் பிளிப்கார்ட் தலத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.