Iphone 12 mini | இவ்வளவு விலை குறைவா? ஐபோன் ஆசைக்கு தீர்வு.. அதிரடி ஆஃபரை அறிவித்துள்ள ஃபிளிப்கார்ட்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மினி மாடல் மொபைல் போனிற்கு ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஆஃபர்களை அள்ளித் தெளித்துள்ளது.

Continues below advertisement

நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க வேண்டியது உங்களுடைய கனவா? இதோ உங்களுக்காகவே ஃபிளிப்கார்ட் பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மினி என்ற மாடலுக்கு ஃபிளிப்கார்ட் ஸ்பெஷல் சலுகைகளை அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த மாடலில் உள்ள அனைத்து வகை போன்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று அறிவித்துள்ளது. 

Continues below advertisement

ஐபோன் மாடல்களில் மிகவும் சிறிய வகை போன் என்றால் அது 12 மினி தான். எளிதாக நம்முடைய சட்டை பாக்கெட்டில் அடங்கும் வகையில் இந்த போன் இருக்கும். இது 5.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆகவே இது மொபைல் போனை பேச மட்டும் பயன்படுத்துபோவருக்கு மிகவும் ஏற்ற மாடலாக அமைந்துள்ளது.  மேலும் 2222mAh பேட்டரி மற்றும் 12 எம்பி முன் கேமரா, 24 எம்பி பின் கேமராவும் அமைந்துள்ளது.


மேலும் இதில் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தும் வசதியும் உள்ளது கூடுதல் சிறப்பு.இது 64ஜிபி,128 ஜிபி,256 ஜிபி என்ற மூன்று ஸ்டோரேஜ் வசதியில் வருகிறது. இவற்றின் விலை 67,900ரூபாய் (64 ஜிபி), 74.900ரூபாய்(128ஜிபி), 82,900(256 ஜிபி) ரூபாய் ஆக உள்ளது. இந்த விலையில் இருந்து தற்போது ஃபிளிப்கார்ட் ஆப்பில் சேல் என்ற ஒன்றை அறிவித்து அதிரடி தள்ளுபடிகளை அள்ளித் தெளித்துள்ளது. 

Facebook Messenger Soundmojis | இனிமே எமோஜி மட்டுமில்ல.. சவுண்ட்மோஜிஸும் வருது.. வந்தாச்சு அசத்தல் அப்டேட்..!

அதன்படி அனைத்து மாடல்களுக்கும் 2000 ரூபாய் நேரடி தள்ளுபடி அளித்துள்ளது. அத்துடன் ஹெச்டிஎஃப்சி கிரேடிட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 6000 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் அறிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த விலையில் இருந்து 6 ஆயிரம் ரூபாய் வரை குறைகிறது. அத்துடன் உங்களிடம் இருக்கும் பழைய மொபைல் போன்களுக்கு 8000 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கிறது. 


ஆக மொத்தம் ஐபோன் மினி 12 போனின் விலையிலிருந்து சுமார் 15 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளது. இதனால் 52,900ரூபாய் (64 ஜிபி), 59.900ரூபாய்(128ஜிபி), 67,900(256 ஜிபி) ரூபாய் வரை குறையும் வாய்ப்பு உள்ளது. உங்களுடைய பழைய மொபைல் போனின் மாடலுக்கு ஏற்ப இந்த எக்ஸ்சேஞ்சு விலை நிர்ணயிக்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் ஐபோன் 12 ன் விலை 10,000 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளது. பல நாட்களாக விலையை பார்த்து ஐபோன் வாங்காமால் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இதை பயன்படுத்தி கொண்டால் உங்களுடைய நீண்ட நாள் கனவு நினைவாகும். ஒன்பிளஸ், ரியல்மி போன்ற பல மொபைல் போன்களுக்கு அதிக தள்ளுபடிகளை அளித்து வந்த ஃபிளிப்கார்ட் நிறுவனம் தற்போது ஐபோனிற்கு இப்படி ஒரு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:”பறந்து செல்ல வா!” - விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ‘பறக்கும் கார்கள்’

Continues below advertisement
Sponsored Links by Taboola