டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்கள் உள்ளன. வரும் 23ஆம் தேதி தொடக்க விழாவுடன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் 120க்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். இது கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்ற 117 பேர் கொண்ட இந்திய அணியை விட மிகவும் அதிகமான ஒன்று. இந்நிலையில் நேற்று முதல் கட்டமாக 90 இந்திய வீரர் வீராங்கனைகள் டெல்லியிலிருந்து டோக்கியோவிற்கு விமானம் மூலம் புறப்பட்டனர்.
இதற்காக டெல்லி விமானத்தில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கலந்து கொண்டார். அப்போது அங்கு இந்தியாவின் ஒலிம்பிக் பாடல் ஒலிக்கப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அனுராக் தாகூர் பேசி வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினார். இதன்பின்னர் வீரர் வீராங்கனைகள் அனைவரும் ஏர் இந்தியா விமானம் மூலம் புறப்பட்டனர்.
அங்கிருந்து கிளம்பிய வீரர் வீராங்கனைகளுக்கு விமான பணியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுதொடர்பாக காட்சிகள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் சில
முன்னதாக ஒலிம்பிக் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது. அதாவது சுமித் நாகல் ஆடவர் ஒற்றையர் பிரிவிற்கு மட்டும் தகுதி பெற்றார். அவரும் போபண்ணாவும் ஆடவர் இரட்டையர் பிரிவில் தகுதி பெறவில்லை. மேலும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா சார்பில் யாரும் களமிறங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் அன்கிதா ரெய்னா ஜோடி சற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் படிக்க: இன்னும் 6 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: 4ஆவது முறை ஒலிம்பிக் செல்லும் சானியா மிர்சா சாதிப்பாரா?