மெசஞ்சர் பயன்பாட்டில் 'சவுண்ட்மோஜிஸ்' என்ற ஒலியுடன்  கூடிய ஈமோஜிகளை புதிதாக அறிமுகம் செய்யவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் மட்டுமில்லாமல் அனைத்துத் தரப்பட்ட மக்களும் இணையத்தினைப் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. இணையத்தில் கிடைக்காதது ஒன்றும் இல்லை என்ற நிலையில்தான் நாம் இப்பொழுது உள்ளோம். இதோடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற பல்வேறு செயலிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தங்களுக்குப்பிடித்த நண்பர்களுடன் பேஸ்புக் மெசேஞ்சரில் பேசுவது என்பது அதிகரித்து வருகிறது. இங்கு நம்முடைய உணர்வுகளை எழுது வாயிலாக தெரிவித்தாலும் சில நேரங்களில் நாம் பேசுவது தவறுதலாக சென்றுவிடும். இதுபோன்ற பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொள்ளாமல் இருப்பதற்கும், சொல்ல முடியாத விஷயங்களைக்கூட நாம் ஈமோஜிக்கள் மூலம் தெரியப்படுத்தி வருகிறோம். ஆனால் இப்பொழுது பல நேரங்களில் காலை வணக்கம், நன்றி, சிரிப்பு, கவலை, சோகம், பாராட்டு, வாழ்த்துக்கள் போன்றவற்றையெல்லாம் ஈமோஜிக்கள் மூலம் மட்டுமே நாம் வெளிப்படுத்தி வருகிறோம்.



இப்படி இணையத்தில் மிகப்பெரிய முக்கியப்பங்கு வகித்துவரும் இத்தகைய ஈமோஜிகளுக்கான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் ஈமோஜி கண்டறியப்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில் இதயம், பூங்கொத்து, குட் மானிங் போன்ற ஈமோஜிகள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் வளர்த்து வரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப, மகிழ்ச்சி, சோகம், கோபம், பயம், வெறுப்பு, இன்பம் போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக பல ஈமோஜிக்கள் வெளியாகி மக்களிடம் பயன்பாட்டில் உள்ளது. தற்பொழுது உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும், 2.4 பில்லியனுக்கும் அதிகமான செய்திகளை மெசஞ்சரில் ஈமோஜிகளுடன் அனுப்புகிறார்கள். மேலும் உலகெங்கிலும் உள்ள மெசஞ்சர் அரட்டைகளுக்கு ஈமோஜிகள் பல்வேறு வண்ணத்தையும் சுறுசுறுப்பையும் நண்பர்களுக்குக் கொண்டு சேர்க்கின்றன. தற்பொழுது 3521-க்கும் மேற்பட்ட ஈமோஜிகள் உள்ளன.


இந்நிலையில் மக்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும்  விதமாக மெசஞ்சர் பயன்பாட்டில் 'சவுண்ட்மோஜிஸ்' என்ற ஒலியுடன்  கூடிய ஈமோஜிகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த சவுண்ட் ஈமோஜிகளைப்பயன்படுத்தி கைதட்டல், டிரம்ரோல் மற்றும் வில்லத்தனமான சிரிப்பு உள்ளிட்ட சிறிய ஒலி கிளிப்புகளை அனுப்ப பயனர்களை அனுமதிக்கிறது. இதன் மூலம் மக்கள் தினமும்  வித்தியாசமான ஒலிகளுடன் உரையாடத் தொடங்கிவிடுவார்கள். இந்நேரத்தில் இந்த புதிய சவுண்ட் ஈமோஜினை எப்படி பயன்படுத்த வேண்டும் என நாம் இங்கு அறிந்து கொள்வோம்.



Sound emoji-ஐ பயன்படுத்த வேண்டும் எனில், பயனர்கள் மெசஞ்சர் செயலிக்குள் சென்று, chat-ஐ துவக்கி smiley face tap-ஐ கிளிக் செய்யவேண்டும். அதிலுள்ள expressions menu தேர்வு செய்து, loudspeaker என்ற ஐகானைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  அதிலிருந்து பேஸ்புக் பயனர்கள் தங்களுக்குப்பிடித்தமான சவுண்ட் ஈமோஜிகளை நண்பர்களுக்கு அனுப்பி புதிய அம்சங்களுடன் உரையாட அனுமதியளிக்கிறது. மேலும் பயனர்களின் வசதிக்கான இதில் Soundmoji library-ஐ அறிமுகம் செய்யவதாகவும், இதன் மூலம் அவ்வப்போது அறிமுகம் செய்யவிருக்கும் புதிய சவுண்ட் எபெக்ட்டுகள் மற்றம் பிரபலமான ஒலிகளை புதுப்பித்துக்கொள்ளலாம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒவ்வொரு ஒலியும் பயனர்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் அதிகம் பயன்படுத்தப்படக்கூடிய ஈமோஜிகளை நினைத்து வைத்து இந்த புதிய சவுண்ட் ஈமோஜி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எமோஜிக்கள் மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைத்து இருப்பதை உறுதி செய்வதோடு, அவர்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் அளிக்கிறது.