Planet Hunters TESS செயற்கைக்கோள் மூலம், நமது சூரிய உலகத்திற்கு அப்பால் உள்ள இரண்டு எக்ஸோ கிரகங்கள் (Exo- Planets) கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இரண்டு கோள்களை கண்டுபிடிக்க உதவிய Miguel enjoy என்ற இளம்வயது சிறுவனை, நாசா வெகுவாக பாராட்டியுள்ளது. டெஸ் செயற்கைக்கோள் அனுப்பிய தரவுகள் மூலம் சூரிய உலகத்திற்கு அப்பால் உள்ள எக்ஸோ கிரகங்கள் பற்றிய ஆய்வுப்பணிகளை உலகம் முழுவதிலும் உள்ள அறிவியல் ஆர்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஆய்வுப் பணிகளில் கலந்து கொண்ட சிறுவன் Miguel enjoy மற்றும் அவனது தந்தை Cesar Rubio உள்ளிட்ட பலரையும் நாசா தனது ஆய்வுக்கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளது.
கோள்- பி, கோள்- சி:
பூமியிலிருந்து சுமார் 352 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள எச்டி 152843 என்ற நட்சத்திரத்தை இந்த இரண்டு கிரகங்களும் (கோள்- பி, கோள்-சி) சுற்றி வருகின்றன (பூமி சூரியனை சுற்றுவது போல). எச்டி 152843 நட்சத்திரம் சூரியனுக்கு ஒப்பான நிறையைக் கொண்டிருந்தாலும்( Mass), சூரியனை விட 1.5 மடங்கு பெரியதாகவும், சற்று பிரகாசமானதகவும் உள்ளது.
நெப்டியூன் அளவோடு ஒத்துப்போகும் கோள்- பி, பூமியை விட சுமார் 3.4 மடங்கு பெரியதாகும். தனது, நட்சத்திரத்தை ஒரு முறைச் சுற்றி வர வெறும் 12 நாள்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. மற்றொரு கண்டுபிடிப்பான கோள்- சி, எச்டி 152843 நட்சத்திரக் குடும்பத்தின் வெளிப்புற கோளாக (Outer Planets) உள்ளது. இது, பூமியை விட 5.8 மடங்கு பெரியதாகும். இதன் சுற்றுவட்டப் பாதை காலம் 19 முதல் 35 நாட்களாக உள்ளது. அதாவது, இந்த இரண்டு கோள்களையும், நமது சொந்த சூரிய குடும்பத்தில், சூரியனுக்கும்- புதன் (Mercury) கோளுக்கும் உள்ள தொடர்போடு ஒப்பீட்டு செய்து கொள்ளலாம்.
புதன் கிரகத்தின் துருவங்களில் நீர்-பனிக்கட்டியாக உள்ளது. இவை பல கோடி ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் இல்லாதிருந்ததால் இன்றும் ஆவியாகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ் செயற்கைகோள்: நமது சூரிய உலகத்திற்கு அப்பால் உள்ள கிரகங்களை கண்டறிய, ‘டெஸ்’ என்றழைக்கப்படும் செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த 2018ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. ‘டிரான்சிட்டிங் எக்ஸோபிளானெட் சர்வே சாட்டிலைட்’ அல்லது ‘டெஸ்’ என்றும் இது அழைக்கப்படுகிறது.
எக்ஸோ கிரகங்கள்: நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ளன என்பதால் இவற்றை எக்ஸோகிரகங்கள் என்று கூறுகிறோம். இவற்றில் 288 கிரகங்கள் சூப்பர் எர்த், அதாவது பூமியைப் போல இரு மடங்கு அளவு உள்ளவை. 662 கிரகங்கள் நெப்ட்யூன் கிரகத்தின் அளவு உடையவை. 165 கிரகங்கள் பெரிய கிரகமான வியாழனின் அளவு உடையவை. 19 கிரகங்கள் வியாழனை விடவும் பெரியவை.
சூரியனுக்கு அருகில் உள்ள எக்ஸோ கிரகங்களின் உஷ்ணநிலை தண்ணீர் இருக்க ஏதுவாக இருப்பதோடு, உயிர்கள் வாழ்க்கை நடத்த ஏதுவாக உள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
சந்திர கிரகணம் - அடிப்படை அறிவியல் என்ன?
UPSC தேர்வில் வெல்வது எப்படி? - டிப்ஸ் சொல்கிறார் சிருஷ்டி ஜெயந்த் தேஷ்முக்..!