பாஸ்டன் டைனமிக்ஸ் அதன் மனித உருவ ரோபோவான அட்லஸின் சமீபத்திய டெமோவை வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி உள்ளது.


ரோபாவின் சிறப்பம்சம்


இந்த ரோபாவின் சிறப்பம்சம், அதன் கால்கள்தான், இதனால் சிக்கலான நிலப்பரப்பில் ஓடி, குதித்து நகர முடியும் என்று கூறுகிறார்கள், அதையே அந்த டெமோ வீடியோவும் காட்டுகிறது. இந்த, ரோபோவுக்கு கைகள் உள்ளன. இந்த அடிப்படை கிரிப்பர்கள் ரோபோவுக்கு புதிய பரிணாமத்தை அளிக்கின்றன. ஒரு சுறுசுறுப்பான ரோபாவாக இருப்பதற்குப் பதிலாக, அட்லஸ் ஒரு மனிதனுக்கு நெருக்கமான ஒன்றாக மாறுகிறது, அது தானாக கையில் எடுக்கக்கூடிய எதையும் எடுத்து கடினமான இடங்களில் ஏறி எடுத்துக்கொண்டு வந்து வேலை செய்பவரிடம் கொடுக்கும் திறன் கொண்டுள்ளது.



எடையை தூக்கும் ரோபோ


இந்த ரோபோவுக்கு நகம் போன்ற பிடியில் ஒரு நிலையான விரல் மற்றும் ஒரு நகரும் விரல் உள்ளது. பாஸ்டன் டைனமிக்ஸ் கூறுகையில், கிரிப்பர்கள் அதிக எடை தூக்கும் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டதாகவும், அட்லஸ் அதனை சிக்கலான பாதைகளில் எடுத்து செல்லும் திறன் படைத்ததாகவும் சூப்பர் பவுல் விளம்பரத்தில் முதலில் காட்டப்பட்டது என்றும் கூறுகிறது.


தொடர்புடைய செய்திகள்: பிரிட்டனில் இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக ஆவணப்படம்: எதிர்ப்பை பதிவு செய்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!


கடினமான பாதைகளை கடக்கும்


நேற்று வெளியிடப்பட்ட காணொளிகளில் அந்த ரோபோக்கள் கட்டுமான மரக்கட்டைகளையும் நைலான் கருவிப் பையையும் எடுத்து வருவதை காட்டுகிறது. ஒரு வீடியோவில், அட்லஸ் 2 × 8 பலகையை எடுத்து இரண்டு பெட்டிகளுக்கு இடையில் வைத்து ஒரு பாலத்தை உருவாக்கி பின்னர், அந்த டூல்ஸ் பையை தூக்கிக்கொண்டு, அதன் மீது ஏறி பாலத்தை கடந்து, தடையை தாண்டி மேலே ஏறி செல்கிறது. பாலத்தை மட்டுமின்றி சில பல படிக்கட்டுகளையும், தானே உருவாக்கி ஏறுகிறது.






தானே சிந்தித்து பாதைகளை உருவாக்கும்


ஆனால் டூல்ஸ் பேக்-ஆனது கட்டமைப்பின் இரண்டாம் நிலைக்குச் செல்ல வேண்டும் அட்லஸ் வெளிப்படையாக உணர்ந்து, பையை சரியான தூரத்திற்கு விரைவாக வீசுகிறது. பாஸ்டன் டைனமிக்ஸ் இந்த இறுதி சூழ்ச்சியை விவரிக்கிறது: "அட்லஸின் முடிவான நகர்வு, ஒரு தலைகீழ் 540 டிகிரி, மல்டி-ஆக்சிஸ் ஃபிளிப் உடன் முடிவடைகிறது. அந்த ஃபிளிப் ரோபோவின் இயக்கத்திற்கு சமச்சீரற்ற தன்மையை சேர்க்கிறது. இது முன்பு நிகழ்த்தப்பட்ட பார்கரை விட மிகவும் துடிப்பனதாகவும், கடினமானதாகவும் உள்ளது." என்று கூறுகிறது. பாஸ்டன் டைனமிக்ஸின் அட்லஸ் ஒரு ஆராய்ச்சி தளமாகும், மேலும் இது விற்பனைக்கு கிடைக்காது. இந்த அட்லஸ் ரோபோ நீண்ட காலமாக பல வைரல் வீடியோக்களின் நட்சத்திரமாக இருந்து வருகிறது, மேலும் பாஸ்டன் டைனமிக்கின் ரோபோ திறன்களை திறம்பட நிரூபித்துள்ளது. மனித உருவ ரோபாட்டிக்ஸின் சிறிய உலகில், சில போட்டியாளர்கள் அட்லஸின் ஒத்த திறன்களைக் காட்டியுள்ளனர். அவற்றில் நாசாவின் ரோபோனாட் மட்டுமே இதேபோன்ற கை போன்ற கிரிப்பர்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.