Bihar Student Fainted: 50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வெழுதச் சென்ற பிளஸ் 2 மாணவர்; மருத்துவமனையில் அனுமதி- என்ன காரணம்?

மாணவர் மணி சங்கர், 50 மாணவிகள் மத்தியில், தான் ஒரே ஒரு மாணவனாக அமர வைக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் அவர் மயங்கி விழுந்தார்.

Continues below advertisement

எதிர் பாலினத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான விடலைப் பருவத்தினரின் கனவுகளில் ஒன்றாக இருக்கும். ஆனால் அதே நபர், 50-க்கும் மேற்பட்ட எதிர் பாலினத்தவருடன் தனியாக இருக்கும்படி சூழல் ஏற்பட்டால்..

Continues below advertisement

நிஜத்தில் பிஹார் மாநிலத்தில் இவ்வாறு நடைபெற்ற சம்பவம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

50 மாணவிகளுக்கு மத்தியில்:

பிஹார் ஷெரிஃப் அல்லாமா இக்பாக் கல்லூரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மணி சங்கர். இவர் பிஹார் மாநிலம், நாளந்தா அருகே பிரில்லியண்ட் ஸ்கூல் என்னும் பள்ளியில் இண்டர் மீடியட் தேர்வு எழுதச் சென்றார். அங்கு 50 மாணவிகள் தேர்வெழுத வந்திருந்தனர். மாணவர் மணி சங்கர், 50 மாணவிகள் மத்தியில், தான் ஒரே ஒரு மாணவனாக அமர வைக்கப்பட்டார். இதை அறிந்ததும் அவர் மயங்கி விழுந்தார். பதற்றம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக, மணி சங்கரின் உறவினர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து அவருக்குக் காய்ச்சல் உண்டானது. இதனால் மாணவர் மணி சங்கர் அங்குள்ள சதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி:

50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர், பயத்தால் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆசிரியர் - மாணவர் உறவு

ஆசிரியர் என்பது எப்போதுமே மனதுக்கு நெருக்கமான உணர்வு தான். பள்ளி ஆசிரியரை அவ்வப்போது சென்று சந்திக்கும் முன்னாள் மாணவர்கள். கல்லூரி பேராசிரியரை ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்தித்து ஆசி பெறும் முன்னாள் மாணவர் என்று அவ்வப்போது பசுமை மாறாத செய்திகளை நாம் வாசிப்பதுண்டு. ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வை நெருங்குபவர்கள் சிலர் அந்தக் காலத்தில் இருந்தமாதிரி இப்போது ஆசிரியர் மாணவர்கள் பிணைப்பு இல்லை என்று அங்கலாய்த்துக் கொள்ளும் கதைகளும் நாம் கேட்பதுண்டு.

இந்த ஜானர் எல்லாம் இல்லாமல் ஒரு வித்தியாசமான சம்பவம் அண்மையில் விமானத்தில் நடந்தது. பயணங்களின் போது நம் உறவினர்களை, பால்ய நண்பர்களை எதேச்சையாக பார்க்கும் சம்பவங்கள் நிறைய உண்டு. இந்நிலையில் கனடாவில் ஒரு விமானத்தில் நடந்த சம்பவம் இணையவாசிகள் மனதை கொள்ளை கொள்வதாக அமைந்தது.

அந்த விமானத்தின் பணிப்பெண்ணாக பணிபுரிபவர் லாரா என்ற லோரி. அவர் விமானம் புறப்பட்டு பறந்த சில நிமிடங்களில் அனவுன்ஸ்மென்ட் செய்யும் இடத்திற்குச் செல்கிறார். அவர் அங்கு சென்றவுடன் மைக்கை எடுத்து அங்கு அமர்ந்திருந்த ஆசிரியை குறித்துப் பேசிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement