குளிர்கால ஒலிம்பிக் தொடர் பெய்ஜிங் நகரில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் ஆரிஃப் கான் மட்டும் பங்கேற்றுளார். இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒருவருக்கு ஒருவர் சந்திப்பு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அங்கு மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேட்ச் மற்றும் சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர் அலிபாபா ஆகிய இருவரும் சந்தித்து கொண்டனர். அதில் அவர்கள் இருவரின் உருங்களும் ஹாலோகிராம் வடிவத்தில் உருவாக்கப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் நேராக சந்தித்து அருகே நின்று பேசுவது போல் அமைக்க இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அலிபாபா சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலம் இந்த ஹாலோகிராம் தொழில்நுட்ப உதவியுடன் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேட்ச் அலிபாபாவிடம் குளிர்கால ஒலிம்பிக் தொடரின் ஜோதியை மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் கையில் அளிப்பது போல் ஒரு நிகழ்வும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பேசிய தாமஸ் பேட்ச், “கொரோனா பரவல் காலங்களில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் இருப்பது நம்முடைய நேரடி சந்திப்பை எளிதாக்கியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான அலிபாபாவின் நிறுவனம் இந்த மெய்நிகர் தொழில்நுட்பம் தொடர்பாக சில பணிகளை செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சி முழுவதும் அலிபாபவின் ‘க்ளவூட் மீ’ என்ற தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றது.
க்ளவூட் மீ எப்படி செயல்படுகிறது?
அலிபாபா நிறுவன தயாரித்த க்ளவூட் மீ தொழில்நுட்பம் மூலம் பேச ஒரு பூத் அமைக்கப்பட்டுள்ளது. அந்த க்ளவூட் மீ பூத்தில் ஒரு கேமரா மட்டும் இருக்கும். அதில் ஒருவர் நின்று பேசி ரெக்கார்ட் செய்வது உடனடியாக க்ளவூட் தொழில்நுட்பம் மூலம் இணையத்திற்கு சென்றுவிடும். அதன்பின்னர் இதை ஒரு 4கே திரையில் ஹாலோகிராம் வடிவில் திரையிட்டு காட்ட முடியும். அதில் சின்ன நகர்வுள் உட்பட அனைத்தும் வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி தான் தற்போது தாமஸ் பேட்ச் மற்றும் அலிபாபா இந்த ஒலிம்பிக் ஜோதியை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் கமிட்டியுடன் அலிபாபாவின் நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இணைந்து செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற வெர்ச்சுவல் மீட்டிங் தொழில்நுட்பங்கள் இனி நாளடைவில் மிகவும் வைரலாகும் என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க: 8 ஆண்டுகளுக்குப் பிறகு தோற்றத்தை மாற்றிய கூகுள் குரோம் லோகோ..! புதுப் பொலிவுடன் விரைவில்