தற்போதைய நவீனமயமாக்கப்பட்ட காலக்கட்டத்தில், உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் . அதற்கு  யோகா செய்ய வேண்டும் என்பதையே மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். யோகா என்பது மனதையும் உடலையும்  ஒருங்கே செம்மை படுத்துகிறது. ஆசனங்கள், மூச்சு பயிற்சிகள் , தியானங்கள் உள்ளிட்டவை உடலை பலப்படுத்துவதோடு மனதிற்கும் ஆறுதலை தருவதாக கூறுகின்றனர் அதனால் பயனடைந்தவர்கள். யோகா தோன்றியது இந்தியாவில்தான் என்றாலும் உலக மக்களும் அதனை பின்பற்றுவதுதான் அதன் சிறப்பு , அப்படி யோகாவால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றை காணலாம்.




யோகா  நிலைத்தன்மையை அதிகரிக்கிறது


யோகா செய்வதால் உங்கள் உடல் சமநிலையை அடையும் . அது உங்கள் அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்துவிடும். உதாரணமாக காலையில் அமர்ந்து சாக்ஸ் போடும் நபராக இருந்தால் , யோகா உங்களை நின்றுக்கொண்டே சாக்ஸ் போடும் அளவிற்கு நிலையாக மாற்றிவிடும் என்கின்றனர் பிரபல  NIH நிறுவனம். இதனால் தள்ளாடும் வயதிலும் வலுவானவராக இருக்க முடியும்.


யோகா உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது.


30 வயதிற்குப் பிறகு, நாம் தசை பலத்தை  இழக்கத் தொடங்குகிறோம், இதன் விளைவாக நமது இயக்கம் குறையும். "யோகா பயிற்சி வலுவான தசைகளுக்கு வழிவகுக்கும்.  200 பெண்கள் விருகசனம் (மரம் போஸ்) மற்றும் விரபத்ராசனம் II (வாரியர் II) உள்ளிட்ட 12 யோகாசனங்களை இரண்டு வருடங்களாக ஒரு நாளைக்கு 12 நிமிடங்களுக்கு பயிற்சி செய்தனர் இதன் மூலம் அவர்களின் யோகா எலும்பின் அடர்த்தியை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


செரிமானம் :


நம்மில் பலர் மேசையின் மீது வளைந்து எழுதுவது, கீபோர்ட் பயன்படுத்துவது   மற்றும் மொபைல் போனை பார்ப்பது  என  கழுத்தை வளைப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம். இதனால் முதுகெலும்பு பலவீனமாகலாம் . இதற்கு யோகா மிகுந்த ஆறுதலாக இருக்கும்.மேலும் எலும்புகளை பராமரிப்பது கழுத்து வலியைக் குறைப்பதோடு ஆற்றல் அளவை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.




வலி நிவாரணி :


50 மில்லியன் மக்கள் நாள்பட்ட வலியால் பாதிக்கப்படுகின்றனர் என்று CDC கூறுகிறது, ஆனால் யோகா நிவாரணம் அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.பரந்த அளவிலான யோகாசனங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே பயிற்சி செய்தாலும், நாள்பட்ட முதுகுவலியைக் குறைக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. மருத்துவத்தில் மற்றொரு ஆய்வு யோகா கழுத்து வலியைக் குறைக்கும் என கூறுகிறது.



உடல் எடையும் மன அழுத்தமும்



உடல் எடை கூடுவதால் சிலர் அதனை குறைக்க பல்வேறு வழிமுறைகளை தேர்வு செய்கின்றனர். ஆனால் யோகா அதற்கு மிகச்சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. ஆயுட்வேத உணவுடன் யோகாவும் செய்த நபர்கள் சிலர் 9 மாதங்களில் 9 பவுண்டுகள் எடை குறைந்துள்ளனர். யோகாவால் பதற்றம் , மன சோர்வு , மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.