கூகுள் நிறுவனத்தின் அதிநவீன பிராண்டிங்கை வெளிப்படுத்தும் வகையில் 8 ஆண்டுகளுக்குப்பிறகு கூகுள் குரோமின் லோகா புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இதன் வடிவமைப்பாளர் எல்வின் ஹூ டிவிட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.


இன்றைய உலகில் நடக்கும் நிகழ்வுகள் தொடங்கி அனைத்துத் துறைகள் குறித்த அரிய விஷயங்களை அறிந்துக்கொள்ள வேண்டும் என்றாலும் முதலில் நம் நினைவுக்கு வருவது கூகுளில் தேடுதல்  (Google Search) என்பது தான். அந்தளவிற்கு உலகம் முழுவதும் மக்களிடம் பிரபலமாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் குரோம், அறிமுகம் செய்த பிறகு  2011 ஆம் ஆண்டில் புதிய  லோகா புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு கூகுள் குரோம் லோகா மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 8 ஆண்டுகளுக்குப்பிறகு 2022 ஆம் ஆண்டு கூகுள் குரோமில் லோகோவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய ஐகான்கள் விரைவில் உங்கள் சாதனங்களில் தோன்றும் என கூகுள் குரோம் வடிவமைப்பாளர் எல்வீன் ஹூ டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.





8 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ள கூகுள் குரோமில், புதிய மாற்றங்களின் படி லோகோவின் நிறங்கள் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை எனவும், லோகோவில் உள்ள 3 வண்ணங்களுக்கும் உள்ளே  இருந்த  ஷேடோக்கள் நீக்கப்பட்டு, வண்ணங்களைப் பிரகாசமாக்கியுள்ளதாவும் கூகுள் குரோம் வடிவமைப்பாளர் எல்வின் ஹூ கூறியுள்ளார். மேலும் லோகோவில் உள்ள ரெட், புளூ, கிரீன் மற்றும் எல்லோ போன்ற நிறங்களின் சேட்யூரேசன் அதிகப்படுத்தப்பட்டு ஷேடோக்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட கூகுள் குரோம் லோகோ அதிகளவில் எவ்வித மாற்றமும் இல்லாமல்  ஒரு லைவ்லி அனுபவத்தைக்கொடுக்கிறது.


இதோடு புதிய மாற்றங்களின் படி, windows, மேக் ஓ.எஸ் என ஒவ்வொரு தளங்களிலும் கூகுள் குரோமின் ஓ.எஸ் வித்தியாசமாக காட்சியளிக்கும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக மேக் ஓ.எஸ் சாதனங்களில் லோகோ 3 டி தோற்றம் பெற்று இருக்கிறது. இந்த மாற்றங்கள் அடுத்த சில மாதங்களில் படிப்படியாக அனைத்து சாதனங்களிலும் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது கூகுள் குரோம் லோகோவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் இந்த மாற்றம் புதிய மைல்கல்லாக எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 


 














 டிவிட்டர் பயனர் ஒருவர், 2008 ஆம் ஆண்டு அறிமுகமான லோகா தான் அனைவரையும் கவரும் வகையில் இருந்ததாக பதிவிட்டிருந்தார்.  மற்றொரு டிவிட்டர் பயனர் ஒருவர், மீண்டும் 2011 ஆண்டில் அறிமுகமான லோகோவிற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.