கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் தங்களது வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்த படியே பலர் வேலையையும் செய்து வருகின்றனர். இதன்காரணமாக மொபைல் இன்டெர்நெட் ரிசார்ஜ் மிகவும் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலை சரியாக பயன்படுத்தி வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய சலுகைகள் மற்றும் ரிசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மாறி மாறி பல சிறப்பு சலுகைகள் மற்றும் ரிசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் மீண்டும் தனது 199 ரூபாய் ரிசார்ஜ் திட்டத்தில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி இந்தச் சலுகை குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இயல்பாக 199 ரூபாய் ரிசார்ஜ் திட்டத்திற்கு 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பு எதுவும் இல்லாத அளவிற்கு அலைப்புகள் ஆகியவை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் தற்போது சிலருக்கு 35 நாட்களை வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு 1 ஜிபிக்கு பதிலாக 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பிரைம் வீடியோ, இலவச விங்க் மியூசிக், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகியவைகளை வழங்குகின்றன.
இந்தச் சூழலில் தற்போது மேலும் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. எனினும் இந்தத் திட்டம் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டும் செல்லுபடியாகும் என்பதால் இது வாடிக்கையாளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இத்திட்டத்திற்கான வாடிக்கையாளர்களை ஏர்டெல் நிறுவனம் எப்படி தேர்ந்தெடுக்கிறது என்பது தெரியவில்லை. சமீபத்தில் குருகிராம் பகுதியில் ஏர்டெல் நிறுவனம் சோதனை முயற்சியில் 5 ஜி திட்டத்தை அங்கு அறிவித்துள்ளது. அதில் 1 ஜிபிபிஎஸ் வரை வேகத்தை எட்ட முடிந்தது. இதனால் விரைவில் 5ஜி திட்டங்களை மற்ற இடங்களில் செயல்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: Reliance AGM 2021 : ரூ 2500 க்கு ஸ்மார்ட்போன்? - ஜியோவின் அடுத்த மெகா ப்ளான்!