மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிரித்திவிராஜ். இவர், தமிழில் சில படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவிலும் இவருக்கு நிறைய ஆடியன்ஸ் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய இயக்குநர் கனவை சில வருடங்களுக்கு முன்பு கையில் எடுத்தார். நடிகர் மோகன்லாலை ஹீரோவாக நடிக்க வைத்து 'லூசிபர்' படத்தை இயக்கினார். பக்கா கமர்ஷியல் படமான இது மலையாளத்தில் பெரிய ஹிட் அடித்தது. மேலும், அதிக வசூலையும் இப்படம் ஈட்டியது. இப்படத்தில் டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், விவேக் ஓப்ராய் என பல பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடித்தனர். 


 



இந்தப் படம் கொடுத்த வரவேற்பின் காரணமாக தொடர்ந்து படங்களை இயக்கும் எண்ணத்திற்கு வந்தார் பிரித்திவிராஜ். குறிப்பாக, 'லூசிபர் 2' உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவர் மலையாளத்தில் நடித்த 'அய்யப்பனும் கோஷியும்' பெரிய ஹிட்டடித்தது. மேலும், இதை தமிழில் ரீமேக் செய்ய முயற்சியும் நடந்து வருகிறது. தெலுங்கு 'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் ராணா மற்றும் ராம் சரண் நடித்து வருகின்றனர். 


தற்போது பிரித்திவிராஜ் அடுத்து தான் இயக்க போகும் படம் குறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். தான் இயக்கப் போகும் படத்துகான கதை தன்னுடைய மகளின் குறிப்பிலிருந்து கிடைத்தாகவும் பிரித்திவிராஜ் கூறியிருக்கிறார். பிரபல ஊடகம் ஒன்றில் செய்தியாளராக பணியாற்றிய சுப்ரியா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் பிரித்திவிராஜ். இவர்களுக்கு அலங்ரிதா என்ற ஏழு வயது மகள் உள்ளார். சமீபத்தில் மகள் எழுதிய குட்டி கதை ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.  ட்ராயிங் பேட் ஒன்றிலி பிரித்திவியின் மகள் அலங்ரிதா “ அமெரிக்காவில் வசிக்கும் அப்பா மற்றும் மகள் இருவரும் , இரண்டாம் போர் ஏற்படுவதன் காரணமாக , அங்கிருந்து அகதிகள் முகாமிற்கு சென்று விடுகின்றனர். பின்னர் போர் நின்ற பிறகு தன் சொந்த நாட்டிற்கு திரும்பி விடுகின்றனர்” என எழுதியிருக்கிறார்.


 




இதனை பகிர்ந்த பிரித்திவி “ நான் கொரோனா ஊரடங்கு காலத்தில் கேட்ட நல்ல கதைகளில் சிறந்த கதை இதுதான், இதன் மூலம் நான் எனது அடுத்த கதையை தேர்வு செய்துவிட்டேன். ஆனால் இம்முறை திரைக்கு பின்னால் இருந்து, கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவேன் ”என குறிப்பிட்டுருந்தார். நடிக்க வருவதற்கு முன்னதாக இவர் உதவி இயக்குநராக பணியாற்றினார். 


மகளின் நாங்கு வரி கதையினை  தேர்வு செய்த பிரித்திவி ராஜ் படத்திற்கு “ப்ரோ டாடி “ என பெயரிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகனாக மோகன்லான் நடிக்க உள்ளார். ஆஷிர்வாத் சினிமாசின்  ஆண்டனி பெரும்பவோர்  இந்த படத்தை தயாரிக்க உள்ளார். ஸ்ரீஜித் மற்றும் பபின் ஆகியோர் படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளனர்.மேலும் இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைக்கிறார். இது மட்டுமல்லாமல் படத்தின் ஆர்ட் பிரிவு தொட்டு மேக்கப் பிரிவு வரையிலான அனைவரையும் தேர்வு செய்துவிட்டார் பிரித்திவி. பிரித்திவியின் மகள் கொடுத்த  ஒன்லைனின் அடிப்படையில், போர் , அகதிகள் முகாம் என வருவதால், படம் சீரியஸ் டிராமாவாக உருவாகலாம் என  பேசப்பட்டது. ஆனால்   இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த பொழுதுபோக்கு  கதைக்களத்துடன் உருவாக இருப்பதாக படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரித்திவி ராஜ் தெரிவித்திருப்பது. படத்தின் மீதான எதிர்பார்பை அதிகப்படுத்தியுள்ளது.