தென்கொரியாவின் சாங்வான் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றனர்.
இந்த போட்டித் தொடரில் பி 4 கலப்பு பிரிவு 50 மீட்டர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் இந்திய வீரர்கள் ராகுல்,, சிங்கராஜ், தீபெந்தர் ஆகியோர் வெள்ளி வென்றனர்.
அதேபோல, ஆர்3 கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் ப்ரோன் எச்.எச்.1 பிரிவில் சித்தார்த்தா பாபு வெண்கலப் பதக்கம் வென்றனர். அதேபோல, பி4 கலப்பு 50 மீட்டர் பிஸ்டல் எச்.எச்.1 பிரிவில் இந்தியாவின் சிங்கராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
நான்காவது நாளான இன்றைய நிலவரப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான உலக துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் போட்டித் தொடரை நடத்தும் தென்கொரியா 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலத்துடன் முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ் நாடு 3 தங்கம், 2 வெள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், மங்கோலியா 1 தங்கத்துடனும், ஈரான் 1 தங்கம், 1 வெள்ளியுடனும், தாய்லாந்து 1 வெள்ளியுடனும், ஜப்பான் 1 தங்கத்துடனும் உள்ளனர்.
மேலும் படிக்க : ஆசிய கோப்பையில் விலகிய ஷாஹீன் அப்ரிடி... குத்தாட்டம் போடும் இந்தியா.. உலகக் கோப்பை ஞாபகம் இருக்கா..?
மேலும் படிக்க : ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்த ரோகித் கையாளப்போகும் யுக்தி இதுதான்...!