நாள்: 21.08.2022


நல்ல நேரம் :


மதியம் 7.45 மணி முதல் மதியம் 8.45 மணி வரை


மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை


மாலை 1.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை


இராகு :


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை :


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே,


மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். பிடிவாத குணத்தை குறைத்து கொள்வது நல்லது. கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்வது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே,


வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த துறைகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும், சலிப்பும் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பொழுது நபரின் தன்மைகளை அறிந்து செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே,


விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். விரயம் நிறைந்த நாள்.


கடகம் :


கடக ராசி நேயர்களே,  


மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளின் மூலம் தெளிவு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே,


பெற்றோர்களின் ஒத்துழைப்பு நிம்மதியை ஏற்படுத்தும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். உத்தியோகம் சார்ந்த துறைகளில் உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,


கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சாதுர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். மதிப்பு நிறைந்த நாள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே,


நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவியின் மூலம் அலைச்சலும், அனுபவமும் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே,


வாழ்க்கை துணைவரின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதுமையான சிந்தனைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத உதவி கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே,


வழக்கு தொடர்பான விஷயங்களில் உள்ள சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான சில முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே,


கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் அமையும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். முயற்சிகள் ஈடேறும் நாள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, 


பயணங்களின் மூலம் ஆதாயமும், அலைச்சலும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து சமாளிப்பீர்கள். உறவினர்களின் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே,


நட்பு வட்டம் விரிவடையும். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.