உலக செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் கோனேரு ஹம்பி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதன்மூலம், ராபிட் பிளிட்ஸ் போட்டியில் இரண்டு முறை பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
மகளிர் உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கோனேரு ஹம்பி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தப் போட்டியில் கஜகஸ்தானின் பிபிசாரா அசெளபயேவா தங்கம் வென்றார்.
ஆடவர் பிரிவில் நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்ஸென் சாம்பியன் பட்டம் வென்றார். 0/2 புள்ளிகளுடன் கோனேரு ஹம்பி தொடங்கினாலும், இறுதியில் 12.5 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கோனேரு ஹம்பி ஃபிடே மகளிர் ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2019 ஆம் ஆண்டு சாம்பியன் ஆகி ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்த்தார்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கோனேரு ஹம்பி, 15 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனார். மிக இளம் வயதில் செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் ஆன பெண் என்ற சாதனையையும் படைத்தார். பத்மஸ்ரீ, அர்ஜுனா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் கோனேரு ஹம்பி.