உலகப்புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.  இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 3 வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிர்ஜியோசும் மகுடத்திற்காக மோத உள்ளனர். இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.


முன்னதாக, ஜோகோவிச் அரையிறுதிப் போட்டியில் கேமரூன் நோர்ரேவை 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நிக் கிர்ஜியோசை எதிர்த்து ஆடுவதாக இருந்த முன்னாள் சாம்பியன் ரபேல் நடால் வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால், கிர்ஜியோசுக்கு நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றார்.




இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஜோகோவிச் 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைப்பார். மேலும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற ரோஜர் பெடரரின் சாதனையையும் அவர் முறியடிப்பார். மேலும், ஜோகோவிச் வெல்லும் 7வது விம்பிள்டன் தொடராகவும் இது அமையும். 


இந்த போட்டியில் ஜோகோவிச்சை எதிர்த்து ஆடும் கிர்ஜியோஸ் வெற்றி பெற்றால் சர்வதேச அளவில் அவர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். 27 வயதான கிர்ஜியோஸ் செர்வ் செய்வதிலும், ஆட்டத்தை தன் பக்கம் வைத்திருப்பதாலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதால் இந்த போட்டியில் அவர் நிச்சயம் ஜோகோவிச்சிற்கு கடும் போட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.




அதேசமயம், அனுபவமிகுந்த ஜோகோவிச் இந்த போட்டியில் வெற்றி பெற முழு முயற்சியுடன் ஆடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இந்த போட்டியில் வெற்றி பெற்று பெடரர் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பாரக்கலாம். உலகிலேயே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற அரிய சாதனையை ரபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் தன் வசம் வைத்துள்ளார். உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் மூன்றாவது இடத்திலும், கிர்ஜியோஸ் 40வது இடத்திலும் உள்ளனர்.


மேலும் படிக்க : Bhuvneshwar Kumar: டி20 கிரிக்கெட்டில் புவனேஷ்வர்குமார் புதிய சாதனை...! என்ன சாதனை தெரியுமா..?


மேலும் படிக்க : Rohit Sharma Record: ரிக்கிபாண்டிங்கின் சாதனையை சமன் செய்வாரா ரோகித்சர்மா..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண