சவுதாமணி கைது... கொந்தளித்த காயத்ரி ரகுராம்.. கூலாக பதிலளித்த திமுக எம்பி.,

சவுதாமணி கைது செய்த செய்தியை பகிர்ந்து திமுக அரசின் பழிவாங்கும் வகையில் பாஜகவினர் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிறேன் என்றும், திமுகவின் இலக்கு எளிதானவர்களை நோக்கி உள்ளதாக விமர்சித்திருந்தார். 

Continues below advertisement

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டதற்கு திமுக அரசை கண்டித்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு திமுக எம்.பி.செந்தில்குமார்  கிண்டல் செய்யும் விதமாக பதிலளித்துள்ளார். 

Continues below advertisement

தமிழக பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ள சவுதாமணி கடந்த ஜனவரி மாதம் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரான ஒருவர் பேசிய காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் அவர் மீது மத கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இதனையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்துல் மனுதாக்கல் செய்த நிலையில் அதனை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதற்கிடையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சவுதாமணியை சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இந்த கைது நடவடிகைக்கு பாஜவைச் சேர்ந்த பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக உள்ள நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் சவுதாமணி கைது செய்த செய்தியை பகிர்ந்து திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும் பாஜகவினர் கைது சம்பவத்தை கண்டிக்கிறேன் என்றும், திமுகவின் இலக்கு எளிதானவர்களை நோக்கி உள்ளதாகவும் விமர்சித்திருந்தார். 

இதனை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ள திமுக எம்.பி.செந்தில் குமார்,  சரி..நீங்களே உங்களுக்கு தெரிஞ்ச ஒரு கஷ்டமான டார்கெட் சொல்லுங்க. உங்க ஆசைக்கு உள்ளே தூக்கி வைச்சிட்டா போச்சு என தெரிவித்திருந்தார்.  இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய காயத்ரி ரகுராம், திருமாவளவன் (தேசத்திற்கு எதிராகவும், இந்துவுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் ), சமூக நீதிக்கு எதிராக பேசிய ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் மற்றும் லியோனி ஆகியோரின் பெயரை தெரிவித்துள்ளதால் திமுக - பாஜக இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement